×
 

டெல்லிக்கு மீண்டும் குறி!! பாக்., ஐ.எஸ்.ஐ உளவாளிகள் 9 பேர் கைது!! முறியடிக்கப்பட்ட சதி திட்டம்!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிந்து கோவில், பிரபல தாபா உள்ளிட்ட முக்கிய இடங்களில் பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புடைய 9 பேர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சதித் திட்டம் தடுக்கப்பட்டதால் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் ‘கேங் பஸ்ட் ஆப்பரேஷன் 2.0’ என்ற பெயரில் நடத்திய தீவிர சோதனை மற்றும் விசாரணையில் இந்த கும்பல் கைது செய்யப்பட்டது. உளவுத்துறையின் எச்சரிக்கையின் அடிப்படையில் கடந்த ஒரு மாதமாக மேற்கொள்ளப்பட்ட ரகசிய நடவடிக்கையில், ஷசாத் பாத்தி என்பவரின் குழுவைச் சேர்ந்த இந்த 9 பேரும் பிடிபட்டனர்.

கைதானவர்கள் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஹிந்து கோவிலை இலக்கு வைத்து பல நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். 

இதையும் படிங்க: சதிச் செயல்கள் நடக்க வாய்ப்பிருக்கு! பாதுகாப்பை பலப்படுத்துங்க! தமிழக போலீசாருக்கு உளவுத்துறை வார்னிங்!


மேலும், டெல்லி-சோனிபட் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல பஞ்சாபி உணவகம் (தாபா) மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தவும், ஹரியானாவின் ஹிசார் ராணுவ முகாம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளிட்ட பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவும் இந்த கும்பல் சதி திட்டமிட்டிருந்தது.

இவர்கள் பாகிஸ்தான் சென்று ஐ.எஸ்.ஐ. அமைப்பிடம் பயிற்சி பெற்றுள்ளதும், முக்கிய இடங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஐ.எஸ்.ஐ.யிடம் அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதானவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள், மொபைல் போன்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் முக்கிய இடங்களைத் தாக்க ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டிருந்த சதியை முறியடித்துள்ளோம்” எனத் தெரிவித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி, ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கைது நடவடிக்கை இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING: ஆட்சி அமைக்கிறது தவெக..! புதிய அரசுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share