20 ஆண்டுகளில் 95 தோல்விகள்!! ராகுல்காந்தியை கலாய்த்து தள்ளும் பாஜக!!
'காங்., - எம்.பி., ராகுல், கடந்த 20 ஆண்டுகளில், 95 தேர்தல் தோல்விகளை சந்தித்துள்ளார். தொடர் தோல்விக்கான விருது அறிவிக்கப்பட்டால், அவரை தவிர வேறு யாரும் அதை வெல்ல முடியாது' என பாஜ அமித் மாள்வியா கிண்டலடித்துள்ளார்.
பீகார் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.) 243 இடங்களில் 202 இடங்களை வென்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் அடங்கிய மஹாகட்பந்தன் கூட்டணி வெறும் 31 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. தேர்தல் இரு கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று முடிந்தது.
இந்தப் படுதோல்வியைச் சுட்டிக்காட்டி பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாள்வியா சமூக வலைதளத்தில் ராகுல் காந்தியை கடுமையாக கிண்டல் செய்துள்ளார். “ராகுல் அவர்களே! மற்றொரு தேர்தல், மற்றொரு தோல்வி. தேர்தல்களில் தொடர்ச்சியான தோல்விக்கான விருதுகள் இருந்தால் நிச்சயம் அவற்றை அவர் அள்ளிச் செல்வார். அவரைப் பார்த்து பின்னடைவுகள் கூட ஆச்சரியப்படும்” என்று பதிவிட்டார்.
மேலும், ராகுல் காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளராக மாறியது முதல் கடந்த 20 ஆண்டுகளில் கட்சி சந்தித்த 95 தேர்தல் தோல்விகளின் வரைபடத்தையும் அவர் வெளியிட்டார். அதில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தோற்ற இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பீகார் தோல்வியுடன் ராகுலின் தோல்வி எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: பீகாரில் அரியணை யாருக்கு! வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு! காத்திருக்கும் ட்விஸ்ட்!
ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் பீகார் முழுவதும் ‘வாக்காளர் உரிமை யாத்திரை’ என்ற பெயரில் பேரணி நடத்தினார். பா.ஜ., ஓட்டுகளைத் திருடுவதாகக் குற்றம் சாட்டினார். ஆனால் அந்தப் பேரணி நடந்த 110 சட்டசபைத் தொகுதிகளில் ஒரு இடத்தில்கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன் நடத்திய ‘பாரத் ஜோடோ யாத்திரை’ காங்கிரசுக்கு ஓரளவு உதவியது. 2023-ல் தெலுங்கானாவில் நடத்திய நடைபயணம் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவியது. ஆனால் பீகாரில் ராகுலின் பிரசாரம் முற்றிலும் தோல்வியடைந்தது. அவரிடம் உத்வேகம் இல்லாததே காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பீகார் அரியணை யாருக்கு?! துவங்கியது 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு!