ஆதார், ரேஷன் கார்டு எல்லாம் செல்லாது! கறார் காட்டும் தேர்தல் ஆணையம்..
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவை நம்பகமான ஆவணங்கள் இல்லை என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது..
பீகாரில் வாக்காளர் பட்டியலை திருத்துவதற்காக தேர்தல் ஆணையம் (ECI) ஒரு சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையை ஜூன் 24, 2025-ல் தொடங்கியிருக்கு. இதுல ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை (EPIC) ஆகியவை வாக்காளர் தகுதியை உறுதி செய்ய நம்பகமான ஆவணங்களாக ஏற்கப்படாதுனு தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிச்சிருக்கு.
இந்த முடிவு, பீகாரில் நவம்பர் 2025-ல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னாடி பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கு. எதிர்க்கட்சிகள் இதை "வாக்காளர்களை புறக்கணிக்கும் முயற்சி"னு கடுமையா விமர்சிச்சிருக்காங்க.
தேர்தல் ஆணையம், பீகாரில் வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்த, 11 ஆவணங்களை மட்டுமே ஏற்கும்னு ஜூன் 24-ல் அறிவிச்சது. இதுல பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ், மெட்ரிகுலேஷன் சான்றிதழ், நிரந்தர வசிப்பிட சான்றிதழ், ஓபிசி/எஸ்சி/எஸ்டி சாதி சான்றிதழ், காட்டுரிமை சான்றிதழ், குடும்பப் பதிவேடு ஆகியவை அடங்கும். ஆனா, ஆதார், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு போன்றவை இந்த பட்டியலில் இல்லை.
இதையும் படிங்க: பீகார் தேர்தலிலும் மேட்ச் பிக்சிங்..? தேர்தல் ஆணையத்தை தாளிக்கும் ராகுல்காந்தி..!
காரணம், இவை அடையாளத்தை உறுதி செய்யுமே தவிர, குடியுரிமையை உறுதிப்படுத்தாது. ஆதார், 2016 ஆதார் சட்டப்படி குடியுரிமையை நிரூபிக்க முடியாத ஆவணம்னு தேர்தல் ஆணையம் தெளிவா சொல்லியிருக்கு. அதேபோல, குடும்ப அட்டைகளில் பல போலியானவை இருப்பதாகவும், பழைய வாக்காளர் அட்டைகளை பயன்படுத்தினா இந்த திருத்தத்தின் நோக்கமே பயனற்றதாகிடும்னு ஆணையம் கூறியிருக்கு.
இந்த முடிவுக்கு எதிராக, காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்காங்க. "ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை இல்லாம இந்த திருத்தம், ஏழை மக்களையும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும்"னு அவங்க குற்றம்சாட்டுறாங்க. ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், "பீகாரில் 99% மக்களுக்கு ஆதார் இருக்கு, ஆனா இதை ஏற்க மறுக்குறது ஏன்? இது தேர்தல் முன்னாடி வாக்காளர்களை குறைக்கும் சதி"னு குற்றம்சாட்டியிருக்கார்.
உச்ச நீதிமன்றமும், ஜூலை 10-ல் இந்த வழக்கை விசாரிச்சு, "ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை ஏற்கலாமே, இந்த பட்டியல் முடிஞ்சு போனது இல்லையே"னு தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்டிருக்கு. ஆனா, தேர்தல் ஆணையம், "இந்த ஆவணங்கள் குடியுரிமையை உறுதிப்படுத்தாது"னு தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருக்கு.
பீகாரில் இந்த திருத்தம், 2003-க்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்ந்த 2.93 கோடி பேரை மறு சரிபார்க்கறதுக்கு தொடங்கப்பட்டது. இதற்காக, 78,000 பூத்-லெவல் அதிகாரிகள் (BLOs) மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டிருக்காங்க. ஜூலை 26 வரை வாக்காளர்கள் தங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம், ஆகஸ்ட் 1-ல் வரைவு பட்டியல் வெளியாகும், செப்டம்பர் 30-ல் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
ஆனா, பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் இல்லாத ஏழை மக்களுக்கு இது பெரிய சவாலாக இருக்கு. 2007-ல் பீகாரில் வெறும் 25% பிறப்புகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாக ஆய்வுகள் சொல்லுது.எதிர்க்கட்சிகள் இதை "பாஜகவின் ஆதரவோடு நடக்கும் தேர்தல் மோசடி"னு குற்றம்சாட்டுறாங்க.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "இது வாக்குரிமையை பறிக்கும் முயற்சி"னு கூறியிருக்கார். ஆனா, தேர்தல் ஆணையம், "இந்த திருத்தம் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 326-ன்படி, குடியுரிமை உள்ளவர்களை மட்டுமே வாக்காளர்களாக பதிவு செய்ய உறுதி செய்யுது"னு பதில் சொல்லியிருக்கு. இந்த விவகாரம், பீகார் தேர்தலுக்கு முன்னாடி பெரிய அரசியல் புயலை கிளப்பியிருக்கு.
இதையும் படிங்க: பீகார் தேர்தலிலும் மேட்ச் பிக்சிங்..? தேர்தல் ஆணையத்தை தாளிக்கும் ராகுல்காந்தி..!