×
 

அவசரபட்டீங்களே ஆதவ்... வீட்டைச் சுற்றி ரவுண்ட் அடித்த திமுக கொடி கட்டிய கார்... விலகியது மர்மம்...!

ஆதவ் அர்ஜுனா அலுவலகம் அருகை உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு நடிகர் நடிகையர் வருவதால் இவர்கள் அன்றைய தினம் காலை 11 மணிக்கு அங்கே வந்துள்ளனர்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை செயலர் ஆதவ் அர்ஜூனா, இவரது வீடு சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் ரோட்டில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆதவ் அர்ஜுனாவின் வீட்டை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். அதனுடன் திமுக கொடிகட்டிய காரும் வந்துள்ளது. இதனால் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என வக்கீல் மோகன் பார்த்தசாரி தியாகராய நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 

இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆதவ் தரப்பு புகார் குறித்து சென்னை தேனாம்பேட்டை போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்தனர். ஆதவ் அர்ஜுனா அலுவலகம் அருகே சந்தேகப்படும்படி ஆட்டோ ஓட்டி வந்த திருவொற்றியூரைச் சேர்ந்த கணேசனிடம் விசாரணை நடத்தப்பட்டது. கணேசனும் அவருக்கு தெரிந்த ராம் மற்றும் புஷ்பராஜ் ஆகியோர் சினிமாவில் சிறிய வேடங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளனர். அடிக்கடி சினிமா பிரபலங்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்வது இவர்களது வாடிக்கை. 
கடந்த பத்தாம் தேதி மாலை நடிகர் கிங்காங் மகளின் திருமண வரவேற்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர். ஆதவ் அர்ஜுனா அலுவலகம் அருகை உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு நடிகர் நடிகையர் வருவதால் இவர்கள் அன்றைய தினம் காலை 11 மணிக்கு அங்கே வந்துள்ளனர். நடிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டு மதிய உணவுக்கு பின் அதே இடத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் வேறு ஏதேனும் நடிகர் நடிகையர் தென்படுகின்றனர் என காத்திருந்துள்ளனர். 

மாலையில் நடிகர் கிங்காங் மகளின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அங்கிருந்து கிளம்பினர். அதேபோல திமுக கொடி கட்டிய இனோவா கார் திமுக பொறியாளர் பிரிவு மாவட்ட செயலர் குமரேசன் என்பவருக்கு சொந்தமானது. கார் டிரைவர் செந்தில், மேனேஜர் அருணாச்சலம் வழிதவறி கஸ்தூரிரங்கன் ரோட்டுக்கு வந்து திரும்பி சென்றதும் தெரிய வந்தது. விசாரணை முடிவில் ஆட்டோ மற்றும் காரில் வந்த நபர்கள் ஆதவ் அர்ஜுனா அலுவலகத்தை நோட்டமிட வரவில்லை. எவ்வித உள்நோக்கமும் இன்றி கஸ்தூரிரங்கன் ரோட்டுக்கு வந்து சென்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: படத்தை பார்த்தா தான் அழுகை வரும்.. நிஜ சம்பவத்துக்கு வராது.. முதல்வரை நார் நாராக கிழித்த ஆதவ் அர்ஜுனா..!

இதையும் படிங்க: ஜனநாயக உரிமைகளை கேள்விக்குறியாக்கும் புதிய நடைமுறை.. ஆதவ் அர்ஜுனா வலியுறுத்துவது என்ன..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share