×
 

#BREAKING: போலீசை சுட்டுவிட்டு தப்பியோடிய AAP எம்.எல்.ஏ.! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ போலீசாரை சுட்டு விட்டு தப்பி ஓடியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாபைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்தீப் சிங் பதன்மஜ்ரா மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு அளித்த சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் கஸ்டடிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் போலீசாரை சுட்டு விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. 

ஹர்தீப் சிங் பதன்மஜ்ரா, பஞ்சாப் மாநிலத்தின் ஆதம்பூர் தொகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஆவார். 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்று, 117 தொகுதிகளில் 92 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தேர்தலில் ஹர்தீப் சிங் வெற்றி பெற்று, ஆதம்பூர் தொகுதியில் எம்எல்ஏ ஆனார்.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய உறுப்பினராக, இவர் பஞ்சாபில் கட்சியின் கொள்கைகளை முன்னெடுப்பதில் பங்காற்றி வந்தார். இந்த நிலையில் எம்எல்ஏ ஹர்மீத் சிங் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: என் பையனோட குண்டாசை ரத்து பண்ணுங்க… பாலியல் குற்றவாளி ஞானசேகரன் தாய் மனுத்தாக்கல்!

இதனிடையே போலீஸ் கஸ்டடிக்கு அழைத்துச் செல்லும் வழியில், போலீசாரை சுட்டு விட்டு எம்எல்ஏ ஹர்மீத் சிங் தப்பிய ஓடியதாக கூறப்படுகிறது. ஹர்மீத் சிங் பதான் மஜ்ரா போலீசாரை சுட்டு விட்டு தப்பி உடையதாக கூறப்படும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் படிங்க: #BREAKING: பாலியல் குற்றவாளி கெபிராஜுக்கு 10 வருடம் ஜெயில்.. மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share