உரிமைகள் பாதிப்பு..! CJP நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு நோட்டீஸ்..! டெல்லி போலீஸ் நடவடிக்கை..!
CJP நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் வழங்கியது.
டெல்லி காவல்துறை, காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் திட்டமிடப்பட்டிருந்த திரங்கா அணிவகுப்பு அல்லது கூட்டத்தை அனுமதியின்றி நடத்தக் கூடாது என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடிமக்கள், வியாபாரிகள், பயணிகள் உள்ளிட்டோரின் உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நோட்டீஸ் ஜந்தேவாலான் பகுதியில் அவர் தங்கியிருந்த இடத்தில் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
கன்னாட் பிளேஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரதீய நாகரிக சுரக்ஷா சன்ஹிதாவின் 163-ஆவது பிரிவின்கீழ் தடை உத்தரவுகள் அமலில் உள்ளன என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய டெல்லி மாநகராட்சி கவுன்சில் (NDMC) இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை என்றும், அனுமதியின்றி அணிவகுப்பு நடத்தினால் அல்லது கூட்டம் கூட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கொடியை அசைப்பது தடை செய்யப்படவில்லை என்றாலும், தடை செய்யப்பட்ட பகுதியில் அனுமதியற்ற கூட்டம் அல்லது அணிவகுப்பு நடத்துவது தடை உத்தரவுகளை மீறுவதாகக் கருதப்படும் எனவும், கொடி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை, CJP அமைப்பின் ‘லேரா டோ திரங்கா’ போராட்டத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அபிஜீத் டிப்கே, அக்டோபர் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்ட்ரல் பார்க்கில் தேசியக் கொடியுடன் கூடிவர ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: CJP நிறுவனர் அபிஜித் தீப்கே அதிரடி ARREST..! போராட்டம்.. பரபரப்பு..! டெல்லியில் போலீசார் குவிப்பு..!
இதற்கு முன்னர் ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் CJP தலைவர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்ட நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. தேர்தல் ஆணையர் மீதான குற்றச்சாட்டுகளையொட்டி CJP தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த போராட்டம் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் எனக் கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையொட்டி காவல்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. அதன்பிறகுதான் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்னையும், என் குடும்பத்தையும் காவல்துறை மனரீதியாக துன்புறுத்தியது.. அபிஜீத் தீப்கே பகீர் குற்றச்சாட்டு..!!