×
 

ஐடி ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 13% இன்கிரிமெண்ட்... அசெஞ்சர் சூப்பர் மூவ்!!

அசெஞ்சர் நிறுவனம் சம்பள உயர்வை அறிவித்து உள்ளது அதன் ஊழியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீப காலமாக தங்களது ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்து வருகிறது. தற்போது ஏஐ வளர்ச்சி மிகவேகமாக இருக்கும் நிலையில் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு அவர்களின் இடத்தை ஏஐ-யை வைத்து நிரப்புகின்றனர். இதனால் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். இந்த பணிநீக்க நடவடிக்கை சிறிய நிறுவனங்கள் முதல் பெரும் பிரபலமான நிறுவனங்களை வரை நடந்து வருகிறது.

ஐடி துறை எவ்வளவு மோசமாக அடி வாங்கி உள்ளது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் ஆகும். தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்களுக்கு மத்தியில் அசெஞ்சர் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு 3- 13 சதவிகிதம் வரை சம்பள உயர்வை அறிவித்து உள்ளது. லெவல் 8 அதாவது துணை மேனேஜர் தொடங்கி அதற்கு மேல் உள்ள ஊழியர்களுக்கு இந்த சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படிங்க: நாங்க தண்ணீ தர்றோம்! பாகிஸ்தானுக்கு ஆதரவாக வரிந்துகட்டும் சீனா! இந்தியாவை எதிர்க்க ஒன்றுகூடும் பங்காளிகள்..!

கடந்த இரண்டு வருடங்களில் இந்த பிரிவினருக்கு முதல்முறையாக சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.  பலருக்கு 10 சதவிகிதத்திற்கும் மேல் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இரண்டு வருட காத்திருப்பிற்கு பின் அளிக்கப்படும் இந்த சம்பள உயர்வு போதுமானதாக இல்லை என்று ஊழியர்கள் கருதுகின்றனர். அசெஞ்சர் நிறுவனத்தின் வருவாய் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் முன்னேற்றம் அடையாத நிலையில், சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

2 வருடங்களுக்கு பின் இப்போது வழங்கப்பட்டு உள்ளது. முக்கியமாக ஏஐ வந்த பின் அசெஞ்சர் வருவாய் பெரிய அளவில் சரிந்து உள்ளது. இதில் உலக அளவில் மொத்தமாக 50 ஆயிரம் ஊழியர்களுக்கு பதவி உயர்வும், இந்தியாவில் 15 ஆயிரம் ஊழியர்களுக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது எல்லா ஊழியர்களுக்கும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல ஊழியர்களுக்கு இந்த சுற்றில் சம்பள உயர்வு அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு அடுத்த சுற்றில் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  

இதையும் படிங்க: ஆசியாவில் மீண்டும் மிரட்டத் தொடங்கும் கொரோனா.. இந்தியாவில் இவ்வளவு பேருக்கு கொரோனா தொற்றா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share