×
 

சூதாட்ட செயலி வழக்கு.. ED அலுவலகத்தில் ஆஜரான பிரகாஷ் ராஜ்.. கிடுக்குப்பிடி விசாரணை..!!

ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரம் செய்த விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை (ED) அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரத்தில் நடித்ததாக எழுந்த புகாரை அடுத்து, ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை (ED) அலுவலகத்தில் இன்று ஆஜரானார். ‘ஜங்லீ ரம்மி, ஜீட்வின், லோட்டஸ் 365’ உள்ளிட்ட சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், பிரகாஷ் ராஜ் உட்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில், விளம்பரங்களில் நடித்ததற்காக பிரபலங்கள் கமிஷன் பெற்றதாகவும், இதனால் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டு கோடிக்கணக்கில் பண இழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சைபராபாத் காவல்துறை முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத்துறை இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்கிறது. பிரகாஷ் ராஜ் தனது வழக்கறிஞருடன் இன்று அமலாக்கத்துறை முன் ஆஜராகி, விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விளக்கமளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விசாரணையின் போது, தான் ஒரு ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் ஒப்பந்தம் செய்திருந்ததாகவும், ஆனால் அதன் செயல்பாடுகள் குறித்து கவலைகள் எழுந்ததால் 2017 ஆம் ஆண்டிலேயே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாகவும் பிரகாஷ் ராஜ் விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசியல் சண்டையை தேர்தல்ல வச்சிக்கோங்க!! அமலாக்கத்துறையை ஆயுதமா யூஸ் பண்ணாதீங்க!!

இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் உட்பட மற்ற நடிகர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். அமலாக்கத்துறை, பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யவும், வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவு, இதுபோன்ற விளம்பரங்களில் பிரபலங்கள் ஈடுபடுவதற்கு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இதனிடையே இந்த வழக்கில், ராணா டகுபதி கடந்த ஜூலை 23 அன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், திரைப்படப் பணிகளைக் காரணம் காட்டி அவகாசம் கோரியுள்ளார். விஜய் தேவரகொண்டா ஆகஸ்ட் 6 ஆம் தேதியும், மஞ்சு லக்ஷ்மி ஆகஸ்ட் 13 ஆம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரித்து வரும் அமலாக்கத்துறை, சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: பழிவாங்குறதுக்காக 10 வருஷமா துரத்துறாங்க! மச்சானுக்கு சப்போர்ட் செய்யும் ராகுல்காந்தி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share