என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!
டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் தர்மேந்திர பிரதான் பதவி விலகி இருக்கும் சம்பவத்தை சுட்டிக்காட்டி நடிகர் பிரகாஷ்ராஜ் வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் தீவிர போராட்டத்திற்கு பிறகு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த முடிவு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. NEET-UG 2026 தேர்வில் ஏற்பட்ட கேள்வித்தாள் கசிவு மற்றும் பிற ஒழுங்கீனங்கள் தொடர்பாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் Cockroach Janta Party (CJP) தலைமையில் மாணவர்கள் நடத்திய நீண்டகால போராட்டமே இந்த ராஜினாமாவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
போராட்டக்காரர்கள் தொடக்கத்தில் இருந்தே அமைச்சரின் ராஜினாமாவை முக்கியக் கோரிக்கையாக முன்வைத்து வந்தனர். ஜூன் 20 முதல் ஜந்தர் மந்தரில் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில், செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஆதரவு தெரிவித்தார். ஜூலை 20 அன்று போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவம் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
கரப்பான் பூச்சி ஜனதா தளம் கட்சியுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவகாசம் கேட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: டெல்லி போராட்டக்காரர்களிடம் சிக்கிய ‘கருப்பு ஆடு’... மிகப்பெரிய சதி முறியடிப்பு?... பொளந்தெடுத்த பஞ்சாபிகள்...!
மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற்று இருக்கும் சூழ்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். என் அன்பிற்குரிய கரப்பான் பூச்சிகளே என்று கூறி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் மதிப்பிற்குரிய சோனம் வாங்சுக் மற்றும் இளைஞர்களுக்கு துணையாக நின்ற ஒவ்வொருவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஒரு ஆட்சியையே மண்டியிட வைக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டீர்கள் என்றும் வாழ்த்தினார்.
இதையும் படிங்க: இந்தியா முழுவதும் இளைஞர்கள் எழுச்சி..! நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு..!!