×
 

உதயநிதி ஸ்டாலின் கைது! பக்கத்து வீட்டில் பால்கனியில் இருந்து வீடியோ எடுத்த முதல்வர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ்!

உதயநிதி ஸ்டாலின் இல்லம் முன் நடந்த பரபரப்பை நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் தனது பால்கனியில் இருந்து வீடியோ எடுத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முழு விவரம்.

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், காவல்துறையினர் சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லத்துக்குச் சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து வீட்டின் முன்பாக அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மற்றும் காவல்துறையினர் குவிந்ததால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.

இந்த பரபரப்புக்கு மத்தியில், உதயநிதி ஸ்டாலினின் வீட்டிற்கு மிக அருகில் வசிக்கும் நடிகர் சஞ்சீவ் தனது வீட்டின் பால்கனியில் நின்றபடி அங்கு நடந்த சம்பவங்களை செல்போனில் வீடியோவாக பதிவு செய்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் கைது! நீலாங்கரையில் அதிரடி காட்டிய விஜயகுமார் IPS யார் தெரியுமா?

நடிகர் விஜய்யின் கல்லூரி காலத்து நெருங்கிய நண்பரான சஞ்சீவ், போலீஸ் வாகனங்கள் வருகை, பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆதரவாளர்கள் திரண்டது மற்றும் அப்பகுதியில் நிலவிய பரபரப்பான சூழலை தனது பால்கனியில் இருந்து பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

உதயநிதி இல்லம் முன்பு அமைச்சர்கள் சேகர் பாபு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதும் அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்த பரபரப்பான சூழலை சஞ்சீவ் பதிவு செய்த வீடியோ தற்போது பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகம் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறது. பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

உதயநிதி இல்லம் முன்பு நடைபெற்ற சம்பவங்களும், அதனை பால்கனியில் இருந்து நடிகர் சஞ்சீவ் பதிவு செய்த காட்சிகளும் தற்போது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. கைது நடவடிக்கை, அரசியல் எதிர்வினைகள் மற்றும் வைரலாகும் இந்த வீடியோ ஆகியவை தமிழக அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன.

இதையும் படிங்க: ஆபாச நிதியே அரசியலை விட்டு விலகு! சென்னை பாரிமுனையில் பதாகைகள் ஏந்தி தவெகவினர் ஆர்ப்பாட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share