"ஊழலில் ஊறித் திளைத்து தமிழ்நாட்டை சுரண்டும் திமுக"..! ஆதவ் அர்ஜுனா விளாசல்..!!
8000 ரூபாய்க்கு கூப்பன் விவகாரத்தில் மனம் உடைந்து பின் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.
தீய சக்தி தி.மு.க-வின் ஊழல் பணம், அடாவடித் தி.மு.க-வினரின் ரவுடித்தனம், இவை இரண்டுக்கும் தலைமைதாங்கும் அந்தக் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின், அதிகார போதைக்கு, 25 வயதேயான இளம்பெண் பலி கொடுக்கப்பட்டு இருக்கிறார் என தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தை காவல்துறை அறிக்கை மூலம் அறிந்து கொண்ட ஒட்டுமொத்தத் தமிழகப் பெண்களும் தி.மு.க-விற்கு எதிராகக் கொந்தளித்துப்போய் உள்ளனர் என்று குறிப்பிட்டார்.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் விஷக் கலாச்சாரத்தை முதன்முதலில் தமிழ்நாட்டில் விதைத்தது தீய சக்தி தி.மு.க என்று கடுமையாக சாடினார். அந்த விஷக் கலாச்சாரத்தில் ஊறித் திளைத்து முழுவதும் நஞ்சாகிப்போன தி.மு.க-வினர், திருச்சி மாவட்டம், வாழைக்காடு கிராமத்தில், ஓட்டுக்குப் பணம் கொடுத்து, வாக்காளர்களை விலைபேசும் ஊழல் வேலையை நூதன முறையில் செய்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊழலில் ஊறித்திளைத்து ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் சுரண்டி, ஆயிரக்கணக்கான கோடிகளில் பணத்தைக் கொள்ளையடித்து வைத்துள்ள தி.மு.க-வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டான், எப்படியாவது இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற பதவி வெறியில் சுற்றிக் கொண்டிருக்கிறார் எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க: மக்கள் பாதுகாப்புக்கு ஸ்டாலின் தான் பொறுப்பு..! ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்..!!
சிந்துஜா மரணத்தின் வடிவம் நமக்குத் தற்கொலையாகத் தெரியலாம்., ஆனால், அவரை அந்த முடிவுக்குத் தள்ளியது பேராசையும் அராஜக வெறியும் கொண்ட தி.மு.க-வினர் என்று எட்டாயிரம் ரூபாய்க்கு பணம் மாதிரிக்கு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி உள்ளார். தற்போது காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், நேர்மையாகச் செயல்பட்டு, சம்பந்தப்பட்ட தி.மு.க-வினர் மீது வழக்குப் போட்டுக் கைது செய்துள்ளனர் என்றும் இதுவே, முன்புபோல காவல்துறை மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால், "சிந்துஜா குடும்பப் பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டார்; நோய்க் கொடுமையில் தற்கொலை செய்து கொண்டார்" என்றெல்லாம் கதை எழுதி வழக்கை முடித்திருப்பார்கள் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: ஜனநாயகன் பிரச்சனைக்கு உதயநிதியும், எல். முருகனும் தான் காரணம்..! ஆதவ் பகிரங்க குற்றச்சாட்டு..!!