×
 

கருப்பு பட்டையை கிண்டலடித்த சபாநாயகர்... என்ன SICK MINDSET இது? பந்தாடிய அதிமுக...!

கருப்புப் பட்டையை விமர்சித்த சபாநாயகருக்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.

பொதுவாக ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், ஏதேனும் ஒரு நிகழ்வை கண்டிக்கும் விதத்திலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டையோ அல்லது கைகளில் கருப்புப் பட்டையோ அணிந்து வருவது வழக்கம்.

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கிட்னி திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்து கையில் கருப்பு பட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளதாக கூறப்பட்டது. சட்டப்பேரவை ஆரம்பித்ததும் எதற்காக கருத்த பட்டை அணிந்து வந்தீர்கள் என்றும் அதிமுகவினருக்கு ரத்த அழுத்தமா எனவும் சபாநாயகர் அப்பாவு கிண்டலாக கேள்வி எழுப்பியதாக கூறப்பட்டுள்ளது. தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதற்காக கருப்பு பட்டை அணிந்து வந்ததாக அதிமுகவினர் பதில் தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருப்பு பட்டை அணிந்ததை கிண்டலடைக்க சபாநாயகர் அப்பாவு- க்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. கரூர் மக்களின் துயரில் பங்கேற்று, 41 உயிர்களை இழந்த குடும்பத்தாரின் வலிகளை உணர்த்த கருப்புப் பட்டை அணிந்து வந்ததை சபாநாயகர், அமைச்சர் பொறுப்புகளில் இருப்பவர்கள் நக்கலடித்து பேசுவது என்ன மாதிரியான sick mindset என கேள்வி எழுப்பி உள்ளது.

இதையும் படிங்க: கள்ளச்சாராயமும், கரூர் சம்பவமும் ஒன்னா? என்ன பேசுறீங்க இபிஎஸ்... முதல்வர் காரசார வாதம்

16-வது சட்டப்பேரவை முடிந்ததும், உறுப்பினர்களை விட அதிகம் பேசிய சபாநாயகர் என்ற விருதை அப்பாவு-க்கு அளிக்கலாம் என்றும் சாடியது. தங்கள் அரசின் பாதுகாப்பு குறைபாட்டால் 41 உயிர்கள் போன கூச்சமே இல்லாமல் திமுக அரசு இருக்கிறது என்றும் சிறைக் கைதிகளின் அடையாளம் என்று சொல்லும் ஒட்டுண்ணி அமைச்சர், ஆறு மாதங்களுக்கு பிறகு, தான் இருக்கப்போகும் இடம் என்ற நினைப்பிலேயே இருக்கிறார் போல என்றும் சாட்டியுள்ளது.

இதையும் படிங்க: BOMB வெச்சுருக்கோம்... EPS வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share