×
 

மனசாட்சியை தூக்கி எறிந்து விட்டு பச்சை பொய்... திமுகவுக்கு மன்னிப்பே கிடையாது! அதிமுக கண்டனம்...!

மனசாட்சியை தூக்கி எறிந்து விட்டு திமுக பச்சை பொய் பேசுவதாக அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் காட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, மழையில் முளைத்த நெல் மணியை பார்த்த எடப்பாடி பழனிச்சாமிடம் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

நெல்மணிகளை கையில் ஏந்தி தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுகளை அமைச்சர் சக்கரபாணி மறுத்தார். இந்த நிலையில் திமுக அரசை அதிமுக கடுமையாக சாடி உள்ளது. ஏழை விவசாயிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் கண்ணீருடன் காட்டிய இந்த நெல் மணிகளை, திமுக அரசு இப்போதாவது கொள்முதல் செய்யுமா என கேள்வி எழுப்பியுள்ளது.

உங்களுக்கு வேண்டியவர்களுக்கு இந்த நெல் கொண்டு சோறு சமைப்பீர்களா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பப்பட்டது. அன்று மடைமாற்று அரசியல் பேசிய உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியால் இந்த நெல்லை இப்போது உணவுக்கு பயன்படுத்த முடியுமா என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. 

இதையும் படிங்க: மோடிக்கே அல்வா... அவருக்கு தெரிஞ்ச ஒரே வேலை அது தான்! EPS- ஐ பந்தாடிய திமுக...!

மனசாட்சியை தூக்கி எறிந்துவிட்டு, விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து பச்சைப்பொய் பேசி, இவ்வளவு இன்னலுக்கும் காரணமான இந்த விடியா அரசை, பச்சைத் துண்டு அணிந்த ஏழை எளிய விவசாயிகள் மறக்கப் போவதும் இல்லை., மன்னிக்கப் போவதும் இல்லை என்று கடுமையாக சாடியது. 

இதையும் படிங்க: நெல் மூட்டைகள் தேங்கி கெடக்குதுய்யா... EPS- யிடம் வேதனையைக் கொட்டி தீர்த்த விவசாயிகள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share