"நாயை நிப்பாட்டினாலும்"... மானங்கெட்டு போய் கூட்டணியில் இருக்குதா காங்கிரஸ்? விளாசிய அதிமுக..!!
மானங்கெட்டு கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதா என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.
தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்குகின்றன. தொகுதி பங்கீடு செய்து எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த வேட்பாளர்கள் நிற்பார்கள் என்று அறிவிப்பார்கள். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பது அந்த சம்பந்தப்பட்ட கட்சியின் தொண்டர்கள் மட்டுமல்லாது கூட்டணி கட்சித் தொண்டர்களின் பணியாகவும் பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி பங்கீடு முடிந்தது. இந்த நிலையில் இயக்குனர் போஸ் பேசிய கருத்து சர்ச்சையாக மாறி உள்ளது. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் திமுகவினர் களப்பணி ஆற்றி அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் கொடுத்ததாக தெரிகிறது. எங்கள் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் நிற்பதால் அதனை நாங்கள் எதிர்க்க மாட்டோம் என்றும் எங்கள் தலைவர் நாயை நிப்பாட்டினாலும்., நிறைய நிப்பாட்டினாலும் ஜெயிக்க வைப்போம் என்று அவர் பேசி இருந்தார்.
அவரது கருத்துக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி நிற்கின்ற தொகுதியை, “நாயை நிப்பாட்டினாலும்” என திமுக நிர்வாகி போஸ் பேசுவதாக குறிப்பிட்டுள்ளது. இப்படி மானங்கெட்டு போய் ஒரு கூட்டணியில் உள்ளீர்களா என காங்கிரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. திமுக-வின் ஆணவப் போக்கிற்கு ரொம்ப ரோஷமாக பேசிய மாணிக்கம் தாகூர் எம்பி போன்றோர் இப்போதும் தைரியமாக பேசுவார்களா அல்லது அமைதியாக கடந்து போவார்களா என்று கேள்வி எழுப்பிவுள்ளது.
இதையும் படிங்க: திருப்பத்தூரை தினகரனுக்கு தாரை வார்ப்பதா? அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி..! பரபரப்பு..!!
இது ஒரு பக்கம் என்றால், புதுச்சேரியில் தனித்து போட்டி என அறிவித்து, திமுக-விடம் சீட்டுக்கு அலையோ அலையென அலைந்துகொண்டு இருந்தது விசிக என்றும் மார்க்சிஸ்ட் தோழர்களோ, வேண்டா வெறுப்பாக கையெழுத்து போட்டதாக பகிரங்கமாக அறிவித்துவிட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு புது கட்சி வந்ததை காரணமாக காட்டி, கூடவே இருந்த கட்சிகள் மீதான நீண்ட நாள் வன்மத்தை தீர்த்துக்கொள்கிறதா திமுக என்றும் வெக்கமே இல்லாமல் அங்கே உட்கார்ந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நாதக நிர்வாகி பேசிக் கொண்டிருந்த போதே நாற்காலியை வீசிய திமுகவினர்..!! அராஜகம்... வளர்மதி கண்டனம்..!!