×
 

எடப்பாடியை சந்திக்க முதல்வர் விஜய் நேரம் கேட்டாரா..? உண்மையைப் போட்டு உடைத்த அதிமுக..!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க முதல்வர் விஜய் தரப்பில் நேரம் கேட்கப்படவில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க முதல்வர் விஜய் தரப்பில் நேரம் கேட்கப்படவில்லை என்று அதிமுக விளக்கம் கொடுத்திருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆக விஜய் பொறுப்பேற்றவுடன் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து இருந்தார். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மட்டும் அவர் சந்திக்கவில்லை. அதற்கு பதிலாக மற்றொரு தரப்பு அதிமுகவினரை சந்தித்து இருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்றைய தினம் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு வாரத்தில் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் திமுகவின் மூன்றாம் தர நபர்கள் தான் தூண்டுவதாகவும் அதனால் சில இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாகவும் கூறியுள்ளார்.

அதிமுகவின் தூண்டுதல் பெயரிலும் சில இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் விஜய் சந்திக்காதது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதற்கு நேரம் கேட்கப்பட்டதாகவும் அவர் நேரம் தரவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

இதற்கு அதிமுக தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க முதல்வர் விஜய் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி இதனை தெரிவித்தார். எந்த சூழ்நிலையிலும் விஜய் அலுவலகத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க நேரம் கேட்கப்படவில்லை என்று கூறியுள்ளார். நேரம் கேட்டதாக கூறப்படுவது ஏற்புடையது அல்ல என்று கூறினார். 

இதையும் படிங்க: நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share