நீதிமன்ற உத்தரவிற்கே சவால்... திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவை கண்டித்து தீர்மானம்...!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் உள்ள 'தீபத்தூண்' எனப்படும் உயரமான கோபுரத்தில், கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீபம் ஏற்றுவது கோயில் நிர்வாகத்தின் நீண்டகால பாரம்பரியமாக உள்ளது. இது 1996, 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் நீதிமன்றங்களால் அனுமதிக்கப்பட்டது. ஆனால், இந்த தீபத்தூண் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகில் அமைந்துள்ளதால், சில இஸ்லாமிய அமைப்புகள் இது தங்கள் மத இடத்தை அவமதிப்பதாக எதிர்த்து வந்தன.
மதுரையின் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீப ஏற்றம் போன்ற பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகளுக்காக அறியப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றம் தொடர்பான ஒரு சிறிய சர்ச்சை, மாநில அரசு, நீதிமன்றம், மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையே கடுமையான மோதலாக மாறியது.
நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணி எம்பிகள் இடம் கையெழுத்து பெறப்பட்டு திமுக எம்பிக்கள் சபாநாயகரிடம் தீர்மான நோட்டீசை வழங்கினர். இதற்கிடையில் இன்று சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடக்கம்... இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்த அதிமுகவினர்..!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவிற்கே சவால் விடுவதா என திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேல் முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் அதிமுக தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீதித்துறையில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்ற மக்களின் எண்ணத்தை அதிமுக பொதுக்குழு பிரதிபலிப்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக + தவெக ஷாக்...!! - அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்... அறிவாலயம் கோட்டையிலேயே ஓட்டையைப் போட்ட இபிஎஸ்...!