#BREAKING "காங்கிரஸை கலைத்துவிடுங்கள்..." - அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்...!
காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நடந்து முடிந்த பிகார் சட்டமன்றத் தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் ராகுல் காந்தி - தேஜஸ்வி யாதவ் அமைத்த மகா கூட்டணி 34 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருவது விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுக கூட்டமென்றில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாரதிய ஜனதா தலைமையில் உள்ள கூட்டணி பீகாரிலே ஆட்சி அமைக்கிறது. பல்வேறு கருத்துக்களை எல்லாம் இந்திய கூட்டணி விதைத்தது. நான் நேற்று கூட சொன்னேன். காங்கிரஸ் கட்சியை கலைச்சுட்டு போயிருங்கன்னு. தேவையே இல்லைன்னு. அது நாட்டுக்கும் ஆகாது ஊருக்கு ஆகாது எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், காந்தி ஆரம்பித்த காங்கிரஸ் கிடையாது. நேரு ஆரம்பித்து உழைத்த காங்கிரஸ் கிடையாது. நேதாஜி இருந்த காங்கிரஸ் கிடையாது. இன்னைக்கு இருக்கின்ற காங்கிரஸ் காட்டி கொடுக்கின்ற காங்கிரஸ். நாட்டை காட்டி கொடுக்கின்ற காங்கிரஸ்.
இதையும் படிங்க: பாஜகவுக்கு "டாடா " காட்டப் போகிறாரா எடப்பாடி?... ராஜேந்திர பாலாஜி சூசக பேச்சால் சர்ச்சை...!
தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்ற காங்கிரஸ். தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்ற காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆஸ்திரேலியாவில சுற்றுப்பயணம் பண்ணிட்டு இருக்கார். நாட்டை பற்றிய கவலை எல்லாம் காங்கிரஸ் தலைவர்களுக்கு கிடையாது.
திமுக தான் வீணா போன காங்கிரஸ் கட்சியை தூக்கி பிடிச்சுக்கிட்டு இருக்கு. தொப்புன்னு போட்டுருங்க. அந்த கட்சியால் எந்திரிக்கவே முடியாது.
பீகாரில் இன்று நிதீஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி 243 தொகுதிகள்ல கிட்டத்தட்ட 200க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் கூட்டணியே 30 இடங்களை மட்டுமே தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதே நிலைமை.தான் தமிழ்நாட்டிலும் நடக்கப்போகிறது. அங்க 243 தொகுதிகள் இங்க 234 தொகுதிகள், நாங்க ஏற்கனவே எங்களுடய பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் வருகின்ற 2026 மே மாதம் மே 5ஆம் தேதி சென்னை சார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறேன். எடப்பாடியார் சொல்வது போல் 234 தொகுதிகளிலும் 220க்கு மேற்பட்ட தொகுதிகளில் அண்ணா திமுக கூட்டணி வெல்லும் எனக் கூறினார்.
இதையும் படிங்க: கட்சியைக் காட்டிக் கொடுத்து கூத்தடிப்பவர்களை எப்படி ஏற்க முடியும்? - செங்கோட்டையனை சீண்டிய கே.டி.ராஜேந்திர பாலாஜி...!