×
 

தமிழ்நாட்டில் தொடரும் பாலியல் குற்றங்கள்.. தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக இன்பதுரை புகார்..!!

தமிழகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக இன்பத் துரை புகார் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலை கவலை அளிக்கும் வகையில் உள்ளது. தூத்துக்குடி, மதுராந்தகம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இத்தகைய சம்பவங்கள் அரங்கேறி வருவதால், மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு முற்றிலும் பறிபோயுள்ள நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை இந்தப் பிரச்சினை குறித்து தேசிய மகளிர் ஆணையத்திடம் அவசரப் புகார் அளித்துள்ளார். அவரது புகார் மனுவில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து விட்டதாகவும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, தூத்துக்குடி, மதுராந்தகம், கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் அண்மையில் நடந்த சம்பவங்களை எடுத்துக்காட்டிய இன்பதுரை, இத்தகைய குற்றங்கள் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தப் பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து தீர்வு காண சிறப்பு விசாரணைக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார். இந்தப் புகார், தற்போதைய ஆளும் திமுக அரசின் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திரும்பி வருவாரா-னு திருப்பதி வெங்கடாஜலபதிக்கே தெரியும்... செந்தில் பாலாஜியை கலாய்த்த கல்யாணசுந்தரம்..!!

ஏற்கெனவே பல்வேறு பாலியல் குற்ற சம்பவங்களில் ஆளும் கட்சி நிர்வாகிகள் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் சூழலில், இன்பதுரையின் இந்த நடவடிக்கை அரசியல் விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் உள்ளிட்டோர் அளிக்கும் உறுதிமொழிகளுக்கு மாறாக, களநிலவரம் மிகவும் மோசமாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் வந்தா தூக்கி கொண்டாடுவோம்... கடைசி நேரத்துல கூட மாறும்... செல்லூர் ராஜு சூசகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share