“10 ரூபாய் பாலாஜி”... மீண்டும் செந்தில் பாலாஜியை வம்பிழுத்த எடப்பாடி பழனிசாமி...!
இந்த திமுக ஆட்சி ஊழல் நிறைந்த திராவிட மாடல் ஆட்சி. அந்தத் துறையின் அமைச்சர் 10 ரூபாய் பாலாஜி.
கலசபாக்கம் தொகுதி வில்வாரணி நட்சத்திர கோயிலில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது
வலுவான கூட்டணி வைத்துல்லதால் வெற்றி பெற்று விடலாம் என்று ஸ்டாலின் பகல் கனவு கண்டு கொண்டுள்ளார்.
திமுக குடும்பங்களுக்காக திட்டங்களை கொண்டு வந்து கோடி கோடியாக கொள்ளை அடிக்கின்றனர். ஆனால் அதிமுக மக்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தது. திமுக ஆட்சிக்கு வரும்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை 10 சதவீதம் மட்டுமே நிறைவேற்றியுள்ளது. ஆனால் 90 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறுகின்றனர். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக.
தமிழகம் தற்போது போதைப்பொருள் மிகுந்த மாநிலமாக மாறி உள்ளது. மதுக்கடைகளில் இருந்து ஊழல் செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு ஆட்சி செய்யும் இந்த திமுக ஆட்சி ஊழல் நிறைந்த திராவிட மாடல் ஆட்சி. அந்தத் துறையின் அமைச்சர் 10 ரூபாய் பாலாஜி.
இதையும் படிங்க: 10 ரூபாய் அமைச்சர்... செந்தில் பாலாஜியை பங்கமாய் கலாய்த்த எடப்பாடி பழனிசாமி...!
அதிமுகவில் இருந்து 8 பேர் திமுகவிற்கு சென்று அங்கு அமைச்சர் ஆகியுள்ளனர். அதில் அதிகம் கப்பம் கட்டுபவர்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்கும். ஆனால் அதிமுக வில் திறமையுள்ள வர்களுக்கு மட்டும் தான் அமைச்சர் பதவி.
அதிமுக ஆட்சியில் தமிழகம் பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு பல விருதுகளை வாங்கியது. திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட அம்மா மெடிக்கல் அதிமுக ஆட்சிக்கு வந்த பின் 2000 புதிய அம்மா மெடிக்கல்ஸ் திறக்கப்படும்.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு மழைநீரை சேமித்து வைத்து சரியான நேரத்தில் ஆறுகளில் இருந்து திறந்து வைக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் முறையாக தண்ணீர் திறக்கப்படவில்லை.
நீட் தேர்வில் அரசு பள்ளிகளில் படித்து மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்க கொண்டுவந்தது அதிமுக ஆட்சி. கலசப்பாக்கத்தில் மட்டும் 9 பேர் தேர்வுவில் வெற்றி பெற்று டாக்டருக்கு படிக்கின்றனர். அவர்களின் முழு செலவும் அரசே செய்யும்.
தமிழகத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் 6 லட்சம் குடும்பத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது வழங்கப்பட்டது. ஆனால் அது திமுக நிறுத்திவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் திட்டம் தொடரப்படும்.
அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதே இல்லை. ஆனால் திமுக ஆட்சி 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கலசப்பாக்கம் தொகுதியில் தாலுகா அலுவலகம், நீதிமன்றம், நெல் கொள்முதல் நிலையம், சாலை வசதி, உதவி பொறியாளர் அலுவலகம் போன்ற பல்வேறு அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழை, எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்படும். கொரோனா காலத்தில் ஓராண்டு மக்களுக்கு ரேஷன் கடையில் அனைத்து பொருட்களும் இலவசமாகவும், அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்கு 3 வேளை உணவு இலவசமாக வழங்கப்பட்டது.
இறுதியில் போளூர் தொகுதி எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்கமெல்லாம் பூசப்பட்ட செங்கோல் மற்றும் வால் நிலை பரிசு வழங்கினார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வழக்கு.. இது முடியாது போலயே.. தமிழக அரசை விளாசிய சுப்ரீம்கோர்ட்..!!