×
 

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்பு..! பதவிப்பிரமாணம் செய்து வைத்த ராஜ்யசபா து.தலைவர்..!

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் தனபால், இன்பதுரை ஆகியோர் பதவியேற்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான ஆறு உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைந்தது. பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைந்தது.

ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபோது, திமுக சார்பில் வில்சன், சல்மா,சிவலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டனர்.

மேலும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மையம் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. மக்கள் நீதி மையம் சார்பில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்களும், கமல்ஹாசனை மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: "கமல்ஹாசன் எனும் நான்"... மாநிலங்களவையில் தமிழில் பொறுப்பேற்ற கமல்..!

இதன் மூலம் திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆறு பேரும் போட்டி இன்றி தேர்வாகினர். இவர்கள் தவிர்த்து ஏழு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றபோது, திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்களும், கமல்ஹாசனை மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரது மனுக்களும் நிராகரிக்கப்பட்டது.

இதை எடுத்து திமுக கூட்டணி சார்பில் தேர்வான மாநிலங்களவை உறுப்பினர்கள் நான்கு பேர் ஏற்கனவே பதவி ஏற்றனர். இந்த நிலையில் இன்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட இருவரும் பதவி ஏற்று கொண்டனர்.

ம. தனபால், இன்பத்துரை ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இருவரும் தமிழில் உறுதிமொழி ஏற்றினர். மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அதிமுக உறுப்பினர்கள் இருவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதையும் படிங்க: எதுக்காக அவசரம்? வாக்காளர் சிறப்பு திருத்தம் பற்றி விவாதிக்க MP மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share