×
 

விஜய் பிரதமர் ஆவாரா?... “அதை யாரும் தடுக்க முடியாது”... அதிமுக மாஜி கொடுத்த அதிரடி பதில்...!

ஒவ்வொரு நடிகர்களின் ரசிகர்களும் தாங்கள் சார்ந்துள்ள தலைவர்களை பிரதமராகவும், ஜனாதிபதியாகவும், முதலமைச்சராகவும் கற்பனை செய்து பார்ப்பது வழக்கம், அதை யாரும் தடுக்க முடியாது 

உலக தலைவர்கள் போற்றுகின்ற பிரதமராக,  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேச விரும்புகின்ற பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திர மோடி க்கு நிகராக இணையாக, சொல்லக்கூடிய அளவிற்கு இந்தியாவில் யாருமே கிடையாது!- முன்னாள் அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி பேட்டி!!

கப்பலோட்டிய தமிழன்  வ.உ. சிதம்பரனாரின் 155- வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசி அருகே திருத்தங்கல்லி லுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 

 அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :-

சட்டமன்ற நிகழ்வுகள்  குறித்த கேள்விக்கு,  சட்டமன்றத்திற்கு புதிய உறுப்பினர்கள் வந்துள்ளார்கள், அவர்கள் அனுபவமான பின்னர் எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். சட்டமன்றத்தை காமெடியாக பார்க்கக் கூடாது.சட்டங்களை இயற்றக்கூடிய சபை எனவே மரியாதையாகத்தான் சட்டமன்ற நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும். 

இதையும் படிங்க: சிங்கப்பெண் அதிரடி படை... முறையான அதிகாரம் இல்லை... EPS சரமாரி குற்றச்சாட்டு..!!

பட்டாசு ஆலைகளில் உரிமம் வழங்குவதில் ஊழல் நடப்பதாக அமைச்சர் கீர்த்தனா குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு? அதிமுக ஆட்சி, திமுக ஆட்சி, தவெக ஆட்சி என்ற பாகுபாடு இல்லாமல்  எல்லா ஆட்சிகளிலும்  நல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள், தவறான அதிகாரிகளும் இருக்கிறார்கள். அதனால் ஒட்டுமொத்தமாக சென்ற திராவிட ஆட்சி காலத்தில் ஊழல் நடந்துள்ளதாக பொத்தாம் பொதுவாக சொல்வது ஏற்புடையதல்ல. அது தவறான கருத்து.

தற்போது ஆட்சி  சுத்தமாக நடக்கிறது என்பதும் தவறானது,  தற்போதும் ஆங்காங்கே தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தவறுகள்  எங்கேயாவது ஒரு இடத்தில் நடக்கத்தான் செய்யும், பட்டாசு ஆலைகளை பொறுத்தவரை நியாயமான நேர்மையான அதிகாரிகள் அதிகளவில் இருக்கிறார்கள்

பட்டாசு தொழிலாளர்கள் படும் வேதனைகள், பட்டாசு தொழிலதிபர்கள் படும் கஷ்டங்களை அறிந்த அதிகாரிகள் அதிகம் இருக்கிறார்கள். பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழக அளவில் அனைத்து துறைகளிலும் அதிகாரிகள்செயல்படுகிறார்கள். ஒட்டுமொத்தமாக பொத்தம் பொதுவாக குற்றம் சொல்வது என்பது ஏற்புடையதல்ல.

விஜய் பிரதமராவார் என்ற பேச்சு குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு நடிகர்களின் ரசிகர்களும் தாங்கள் சார்ந்துள்ள தலைவர்களை பிரதமராகவும், ஜனாதிபதியாகவும், முதலமைச்சராகவும் கற்பனை செய்து பார்ப்பது வழக்கம், அதை யாரும் தடுக்க முடியாது 

அதுபோல் முதல்வர் விஜ ய்யின் ரசிகர்கள் அவர் முதல்வராகிவிட்ட காரணத்தினால், அடுத்து அவரை பிரதமர் என கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு எத்தனை படிகளை தாண்ட வேண்டும், எத்தனை பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள சிக்கல். ஆகவே பாரத பிரதமராக உள்ள மோடி இன்றைக்கு வலுவான தலைமையில் இருக்கிறார். அவரை எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கு கிடையாது 

வலுவான கூட்டணியோடு மோடி உலகம் வியக்கின்ற ஒரு பிரதமராக, உலக தலைவர்கள் போற்றுகின்ற பிரதமராக,  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்  பேச விரும்புகின்ற பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திர மோடி க்கு நிகராக இணையாக, சொல்லக்கூடிய அளவிற்கு இந்தியாவில் யாருமே கிடையாது.

காங்கிரசிற்கும் தவெகவிற்கும்  அமைந்துள்ள கூட்டணி மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் போட்டுள்ள முடிச்சுதான். எந்த நேரத்திலும் கழண்டுவிடும், பிரச்சினையாகி விலகிவிடுவார்கள்

தவெக ஆட்சி என்பது நிலைத்தன்மையோடு முழு அறுதிப்பெரும்பான்மையுடன் அமைந்த ஆட்சி கிடையாது. தவெக ஆட்சி சூழ்நிலையால் உருவாக்கப்பட்ட ஆட்சி, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு ஆபத்துக்கள் சூழ்ந்துள்ளது என்பதை உணர்ந்து அவர்கள் (தவெகவினர்) செயல்பட வேண்டும். 1200- கோடியில் புதிய சட்டமன்றம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு குறித்த கேள்விக்கு, 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இதேபோன்ற கடற்கரை சாலையில் சட்டமன்றம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது, அதற்கு திமுக தரப்பில் முட்டுக்கட்டை போட்டதால் நிறுத்தப்பட்டது. 

திமுக தரப்பில் புதிதாக கட்டிய சட்டமன்றத்தின் கட்டிட அமைப்புகள் சரியில்லாத காரணத்தினாலும் அண்ணா சிலை அருகில் இருந்த காரணத்தினாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் என்பதற்காக மீண்டும் செயின் சார்ஜ் கோட்டைக்கே சட்டமன்றம் மாற்றப்பட்டது

தற்போது தவெக அரசு அறிவித்துள்ள புதிய சட்டமன்றம் அமைக்கும் அறிவிப்பு நடந்தால் சந்தோஷம் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “அதை கேட்க வக்கில்லை...” - அதிமுகவை விளாசிய மாணிக்கம் தாகூர்... எம்.எல்.ஏ. கனிமொழிக்கு கொடுத்த கமெண்ட் தான் ஹைலைட்டே...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share