×
 

தவெக ’காட்பாதர்’ ஆக மாறும் செங்கோட்டையன் - விஜய் கொடுக்கப்போகும் முக்கிய பதவி? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் விஜயை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் விஜயை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. 

 முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் நடிகர் விஜய் உடைய கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே செங்கோட்டையன் இரு தினங்களுக்கு முன்பு விஜயை சந்தித்து பேசிவிட்டதாகவும் வரக்கூடிய 27ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் விஜய் கட்சியிலே செங்கோட்டையன் இணைய போகிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கின்றது.

செங்கோட்டையனைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு  சட்டமன்ற உறுப்பினராக ஒன்பது முறை இருந்தவர். அதாவது எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே அல்லது எம்ஜிஆர் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே எம்ஜிஆர் உடன் நெருக்கமாக இருந்தவர். அதன் காரணமாக கட்சி ஆரம்பித்த போது அதில் பயணித்தவர். அதிமுகவின் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். சாதாரண ஒரு கிளை செயலாளராக தொடங்கி மாவட்ட செயலாளர் பிறகு அமைப்பு செயலாளர், தலைமை நிலைய செயலாளர், கட்சி ஆட்சியில் இருந்த போது அவை முன்னவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை அலங்கரித்தவர் மற்றும் மிக நீண்ட அனுபவம் கொண்டவர்.

இதையும் படிங்க: விஜய் ஆச்சரியக்குறியோ… தற்குறியோ.. தேர்தல் மட்டுமே எங்கள் குறி..! அமைச்சர் ரகுபதி பதிலடி..!

தமிழ்நாட்டில் ஒன்பது முறை வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் என்று எடுத்துக்கொண்டால் விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவுக்கு அரிதாக இருக்கக்கூடிய நபர்களில் முக்கியமானவராக செங்கோட்டையன் இருக்கிறார். ஈரோடு மாவட்டத்தினுடைய முக்கிய முகமாக திகழ்ந்தவர். சமீப காலமாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர்களுடன் கடும் மோதல் போக்கிலே இருந்து வந்தார். அதிமுக தலைமை மீது மனக்கசப்பில் இருந்து வந்ததாக கூறப்பட்டது. அதன் காரணமாக அடிக்கடி டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து வந்தார். குறிப்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தார்.  

இதனிடையே, செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி அதில் ஆதிமுகா பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சிக்குள் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதன் காரணமாக அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைக்க போராடுவேன். நீதிமன்றத்தை நாட போகிறேன் என்றெல்லாம் செங்கோட்டையன் தெரிவித்து வந்த நிலையில்,  நாளை மறுதினம் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாகவும் அவருக்கு முக்கியமான பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

அதிமுகவில் எப்படி பண்ருட்டி ராமச்சந்திரன் முக்கியமான நபராக இருந்தாரோ? அதேபோல் தேமுதிக தொடங்கப்பட்ட போதும் அக்கட்சியின் மூத்த வழிகாட்டியாக செயல்பட்டார். அதுபோல தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரையில் தற்போது அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கின்றது செல்லும் இடங்களில் கூட்டங்கள் கூடுகிறது. ஆனால் அவற்றை எப்படி ஒருங்கிணைப்பது, சட்டரீதியாக அனுமதிகள் பெறுவது எப்படி?, அரசியல் ரீதியாக பதிலடி கொடுப்பது எப்படி? உள்ளிட்ட பல்வேறு சவால்கள் சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே அவற்றை சரி செய்யக்கூடிய அவற்றிற்கு ஆலோசனை வழங்கக்கூடிய ஒரு முக்கிய ஆலோசகராக செங்கோட்டையன் செயல்படுவார் எனக்கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இரண்டு தினங்களுக்கு முன்பு விஜயை நேரில் சந்தித்து செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது முக்கிய பதவி தருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: முதல் தேர்தலிலேயே முதல்வர் ஆகணுமாம்.. இவ்வளவுதான் விஜய்..! டி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share