×
 

5000 பேருடன் தவெகவில் இணைவோம்..! அதிமுக நிர்வாகி பகிரங்க அறிவிப்பு..!

5000 பேருடன் தமிழக வெற்றி கழகத்தில் இணை இருப்பதாக அதிமுகவை சேர்ந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு அதிர்ச்சி அலை. அதிமுகவின் முக்கிய நிர்வாகி மற்றும் ஓ.பி.எஸ் அணியின் முன்னாள் தீவிர ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தனது சுமார் 5,000 ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு விலகி முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டியில், தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் தன்னை மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்கியதாகக் கூறினார். குறிப்பாக, “தோத்ததுக்கு அப்பறம் கட்சி காரங்க ஃபோன் பண்ணி அழுதாங்க... திடீர்னு தி.மு.கவோட கூட்டணி வைக்குற அளவுக்கு போனத எங்களால ஏத்துக்க முடியல” என்று உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.

திமுகவுடன் ரகசிய கூட்டணி பேச்சுகள் அல்லது ஆதரவு நிலைப்பாடு தனக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்ததாகவும் அவர் விளக்கினார். ஓ.பி.எஸ் அணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகும், கட்சியின் சமீபகால அரசியல் போக்கு தன்னை அதிருப்திப்படுத்தியதாகக் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லியில் பேசியாச்சு..! நம்ம ஆட்சிதான்..! எடப்பாடி சொன்னதை உடைத்த சி.வி. சண்முகம்..!

தனது ஆதரவாளர்களுடன் நீண்ட ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்ததாகவும், தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே த.வெ.கவை தேர்வு செய்ததாகவும் அவர் சொன்னார். விரைவில் அதிகாரப்பூர்வமாக தனது குழுவினருடன் த.வெ.கவில் இணையப் போவதாக அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: தவெக ஆட்சிக்கு சப்போர்ட்..! எஸ்.பி. வேலுமணிக்கு எதிர்ப்பு... சட்டசபையில் சலசலப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share