“கிட்னிகள் ஜாக்கிரதை” பேட்ஜூடன் சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்... இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு...!
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கிட்னிகள் ஜாக்கிரதை என்ற பேட்ஜுடன் வந்ததால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏழை எளிய விசைத்தறி தொழிலாளர்களிடம் இருந்து கிட்னி திருடப்பட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. யே திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குராமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அவர்களைக் குறிவைத்து சிறுநீரகம் திருட்டு நடந்ததாகப் பரபர புகார்கள் எழுந்தன.
ஏழ்மை மற்றும் கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து பணத்திற்காக அவர்களுடைய சிறுநீரகங்களை பெற்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக மருத்துவத் திட்டப் பணிகள் இயக்குநர் வினித் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இடைத்தரகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கிட்னி திருட்டு விவகாரத்தில் திமுகவிற்கு நெருக்கமான பிரமுகரின் மருத்துவமனைக்கு தொடர்பிருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ கதிரவன் குடும்பத்திற்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகக்கூறி அதிமுக இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. அதிமுக 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன், கிட்னி திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு பத்து ரூபா... அப்பதான் விஜய் மேல செருப்பு வீசுனாங்க... நயினார் ஓபன் டாக்..!
இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் 3வது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கிட்னி திருட்டு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது சட்டைகளில் கிட்னிகள் ஜாக்கிரதை என்ற பேட்ஜ் உடன் வந்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி... எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி... உண்மையை மறைக்க பாக்குறாங்க! இபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்...!