வழக்கில் சிக்கிய வக்கீல்கள்... சோலியை முடித்த பார் கவுன்சில்..!
போக்சோ மற்றும் போதைப் பொருள் வழக்குகளில் சிக்கிய 9 பேர் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்குகளில் சிக்கிய 9 பேர் வழக்கறிஞர்களாக பணியாற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தடைவிதித்து உள்ளது. போக்சோ வழக்கு மற்றும் போதைப் பொருள் விற்றது தொடர்பாக வழக்கறிஞர்கள் 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
வழக்குகளில் தொடர்புடைய ஒன்பது பேர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வழக்குகளில் சிக்கிய 9 பேர் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த அஜித்குமார், நாகர்கோவிலை சேர்ந்த விஜய், திருவண்ணாமலையைச் சேர்ந்த கஜேந்திரன் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி...முதல்வர் போட்ட கணக்கு!
இந்த 9 பேரும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: களேபரமான அம்பேத்கர் பிறந்தநாள்.. திமுக - பாஜகவினர் இடையே மோதல்..!