×
 

இருமல் மருந்தால் 24 குழந்தைகள் இறந்த விவகாரம்! சாட்டையை சுழற்றும் மத்திய அரசு! இனி தப்பிக்கவே முடியாது!

மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய, 'மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம், 2025' யை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தரமற்ற மருந்துகள் காரணமாக குழந்தைகள் உயிரிழப்புக்கு பெயர் பெற்ற கோல்ட்ரிஃப் இருமல் மருந்து சம்பவத்திற்குப் பின், மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. 'மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம், 2025' என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, மருந்து, மருத்துவ உபகரணங்கள், அழகு சாதனங்களின் தரத்தை உறுதி செய்யும். குளிர்கால பாராளுமன்ற கூட்டத் தொடரில் இந்தச் சட்டம் அறிமுகம் செய்யப்படும்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தால் 20க்கும் மேற்பட்ட 1-6 வயது குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த மருந்துக்கு தடை விதித்தது. தரமற்ற மருந்துகளை கட்டுப்படுத்த சட்டம் தேவை என கோரிக்கைகள் எழுந்தன. 

இதையடுத்து, மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டா தலைமையில் டெல்லியில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) ராஜிவ் ரகுவன்ஷி வரைவு அறிக்கையை தாக்கல் செய்தார். CDSCO (மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு) அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: “மாடு மேய்க்குறவன் கூட இப்படி பேச மாட்டான்...” - அன்புமணியை மட்டுமல்ல விஜயை விட்டு விளாசிய ராமதாஸ்...

1940 சட்டத்தை திருத்தி புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. WHO உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்திய மருந்துகளின் தரமின்மையை விமர்சித்து வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய சட்டம் அமலானதும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பொருட்கள் கடுமையான தர சோதனைக்கு உட்படுத்தப்படும். போலி அல்லது தரமற்ற பொருட்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க CDSCO அதிகாரிகளுக்கு உரிமை அளிக்கப்படும்.

உரிம வழங்கல் டிஜிட்டல் மயமாக்கப்படும், மாநில கட்டுப்பாட்டாளர்கள் ஒருங்கிணைப்பு மேம்படும், சோதனை ஆய்வகங்கள் வலுப்படும். உற்பத்தி முதல் சந்தை வரை ஒவ்வொரு கட்டத்திலும் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். இது, குழந்தைகள் உயிரிழப்புகளை தடுக்கும் முக்கிய முதற்படி என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சட்டம் அமலானால், தரமற்ற மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பேரிடியாக அமையும்.

இதையும் படிங்க: அமெரிக்கா கொடுத்த வார்னிங்!! மார்தட்டும் ட்ரம்ப்! பிரிக்ஸ் அமைப்பில் சேராமல் விலகும் நாடுகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share