×
 

ரூ.3,112 கோடி கலெக்சன்!! தேர்தல் அறக்கட்டளை மூலம் கல்லா கட்டிய பாஜக!! காங்கிரஸுக்கு ரூ.300 கோடிதான்!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், 2024 - 25ம் நிதியாண்டில், தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நிதி, 200 சதவீதம் அதிகரித்து, 3,811 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த பிறகு, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் வழங்கப்படும் நன்கொடை தொகை பெருமளவு அதிகரித்துள்ளது.

2024-25 நிதியாண்டில் ஒன்பது தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் மொத்தம் ரூ.3,811 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 2023-24 நிதியாண்டில் இருந்த ரூ.1,218 கோடியை விட 200 சதவீதம் அதிகமாகும்.

இந்த நன்கொடையில் 82 சதவீதம் அதாவது ரூ.3,112 கோடி பாஜகவுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு 8 சதவீதம் அதாவது ரூ.299 கோடியும், மீதமுள்ள 10 சதவீதம் அதாவது ரூ.400 கோடி பிற அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆட்டத்தை தொடங்கிய பாஜக... EPS உடன் பியூஷ் கோயல் நாளை அதிமுக்கிய ஆலோசனை...!

கடந்த ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி ரத்து செய்தது. அதற்கு முன்பு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரகசியமாக நன்கொடை வழங்கப்பட்டது. இப்போது தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் நிதி வழங்கப்படுகிறது. இதில் ஓரளவு வெளிப்படைத்தன்மை உள்ளது.

தேர்தல் அறக்கட்டளைக்கு நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் காசோலை, வரைவோலை அல்லது ஆன்லைன் மூலம் நிதி வழங்குகின்றனர். அறக்கட்டளை அந்த நிதியை அரசியல் கட்சிகளுக்கு பிரித்து வழங்குகிறது. எந்த கட்சிக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

முன்னணி அறக்கட்டளைகளில் ‘புருடென்ட்’ அறக்கட்டளை மட்டும் பாஜகவுக்கு ரூ.2,180 கோடி வழங்கியுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு பார்தி ஏர்டெல், ஜிண்டால் ஸ்டீல், மேகா இன்ஜினியரிங், டொரண்ட் பார்மா போன்ற முன்னணி நிறுவனங்கள் நிதி வழங்கியுள்ளன.

டாடா குழுமம் நிர்வகிக்கும் ‘புரோகிரசிவ்’ அறக்கட்டளை வசூலித்த ரூ.917 கோடியில் 80 சதவீதத்துக்கு மேல் அதாவது ரூ.739 கோடியை பாஜகவுக்கு வழங்கியுள்ளது. ‘நியூ டெமாக்ரடிக்’ அறக்கட்டளை மஹிந்திரா குழுமத்திடம் இருந்து பெற்ற ரூ.160 கோடியில் ரூ.150 கோடியை பாஜகவுக்கு வழங்கியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் ரத்தான பிறகு அறக்கட்டளைகள் மூலம் நிதி பெருகியுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஜகவுக்கு அதிக நிதி சென்றுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: அம்மாடியோவ்!! திமுகவின் அசூர பலம்! பூத் ஏஜெண்டுகள் தயார்! தேர்தல் கமிஷன் அதிரடி அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share