×
 

“இது எங்க ஏரியா உள்ள வர்றாத”.. திருப்பதி சாலையோரத்தில் ஹாயாக படுத்து ஓய்வெடுத்த சிறுத்தை...!

திருப்பதியில் சாலையோர கண்காணிப்பில் இருந்த சிறுத்தையால் பரபரப்பு

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள சேஷாச்சலம் மலைத்தொடரில் 30 க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளது. இதில் ஐந்து முதல் 10 சிறுத்தைகள் ஏழுமலையான் கோயில் சுற்றி உள்ள வனப்பகுதியில் ஆங்காங்கே திரிந்து வருகிறது. இதனால் எந்த நேரத்தில் சிறுத்தை வரும் என்று தெரியாத நிலையில் தேவஸ்தான அதிகாரிகள் திருப்பதி மலை பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கும், வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கும் நேர கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளனர்.

ஏற்கனவே சிறுத்தையால் ஒரு ஏழு வயது சிறுமி உயிரிழந்த நிலையில் நான்கு வயது சிறுவன் காயங்களுடன் மீட்கப்பட்டான். இந்த சம்பவத்தை அடுத்து திருப்பதி தேவஸ்தான வனத்துறை மற்றும் மாநில வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையால் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே ஏழு சிறுத்தைகள் பிடிக்கப்பட்டு மூன்று சிறுத்தைகள் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் நான்கு சிறுத்தைகள் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பதி அலிபிரியில் இருந்து செர்லோபள்ளி செல்லும் சாலையில் அரவிந்த் கண் மருத்துவமனை எதிரே உள்ள  சாலையோரத்தில் சிறுத்தை ஒன்று அமர்ந்து கொண்டு வாகனங்களை கண்காணித்து வருவது போன்று காத்திருந்தது.

இதையும் படிங்க: மதமாற்றங்களுக்கு சவுக்கடி... திருப்பதி தேவதஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு...!

இதனை பார்த்த ஒரு வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.  சிறுத்தை சாலையோரத்தில்  அமர்ந்து இருக்கும் காட்சி தற்பொழுது பரபரப்பாகி உள்ளது. வாகன ஓட்டிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் இரவு நேரங்களில் அந்த சாலையில் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share