×
 
☰

அக்னிபாத் வீரர்களுக்கு குட் நியூஸ்.? பணி நீட்டிப்பா.? மத்திய அரசு பரிசீலனை..!!

அக்னிபாத் வீரர்களின் பணி காலத்தை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளில் சேர்ந்த முதல் பேட்ச் வீரர்களின் நான்கு ஆண்டு பணிக்காலம் விரைவில் முடிவடையும் நிலையில், அவர்களின் பணியை நீட்டிக்கும் விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. நிரந்தரப் பணிக்குத் தேர்வாகும் 25 சதவீதத்தினரைத் தவிர, மற்றவர்களில் சிலருக்கு கூடுதல் பணி வாய்ப்பு வழங்கும் திட்டம் குறித்து உயர்நிலைக் கூட்டங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அக்னிபாத் திட்டம், இளைஞர்களை நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் முப்படைகளில் பணியமர்த்தும் முறையாகும். இந்தக் காலத்தில் அவர்கள் பயிற்சி பெற்று, போர்முனை அனுபவங்களைப் பெறுகின்றனர். பணிக்காலம் முடிந்த பிறகு, செயல்திறன், மருத்துவத் தகுதி மற்றும் படைகளின் தேவைகளின் அடிப்படையில் அதிகபட்சம் 25 சதவீதத்தினர் நிரந்தரப் பணியில் சேர்க்கப்படுகின்றனர்.

மீதமுள்ளவர்கள் சேவா நிதி தொகுப்புடன் வெளியேறுகின்றனர். முதல் பேட்ச் வீரர்களின் பணிக்காலம் கடற்படையில் நவம்பர் 21 அன்று, விமானப்படையில் டிசம்பர் 21 அன்று, தரைப்படையில் டிசம்பர் 31 அன்று முடிவடைய உள்ளது.இந்த நிலையில், நிரந்தரத் தேர்வுக்கு அப்பால் சில வீரர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிவசேனா நிர்வாகி வீட்டில் போதைப்பொருளை வைத்த போலீஸ் அதிகாரி? ரகசிய கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

கடந்த சில நாட்களாக டெல்லியில் உயர்நிலை அதிகாரிகள் கூட்டங்களில் இந்தப் பிரச்னை விவாதிக்கப்பட்டு வருகிறது. நீட்டிப்பு காலம் இரண்டு ஆண்டுகளாக இருக்கலாம் என்றும், அதனால் படைகளில் மூன்று வகை வீரர்கள் உருவாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது நான்கு ஆண்டு அடிப்படைப் பணி, நீட்டிப்பு பெற்றவர்கள் மற்றும் நிரந்தரப் பணியாளர்கள் என்ற பிரிவுகள். எத்தனை பேருக்கு நீட்டிப்பு வழங்கப்படும், எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் முடிவு நவம்பர் 21க்கு முன் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: பேசக்கூட வாய்ப்பு தரல! பிரியங்கா காந்தியை புறக்கணிக்கும் ராகுல்காந்தி! பாஜக காரசார குற்றச்சாட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share