×
 

விவசாயிகளுக்கு ஜாக்பாட்..! களமிறங்கிய AI..!! வேளாண் பட்ஜெட்டில் செம்ம ட்விஸ்ட்..!!

சட்டப்பேரவையில் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கிய நிலையில், தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-27 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை சமர்ப்பித்தார். அதையொட்டி இன்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மத்திய மாநில அரசின் பங்களிப்பில் புதிய வேளாண் இயற்கை தொகுப்பை உருவாக்க ஒன்பது கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். மண்புழு உரக்கூடம் அமைக்க பத்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக வேளாண் துறை அமைச்சர் வினோத் அறிவித்தார். நெல் விதை உற்பத்தி மானியத்திற்கு சிறப்பு திட்டம் அறிவித்து 34.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களின் தன்னிறைவு பெற 203.64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்காக 63.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குறு தானிய இயக்கத்திற்காக 7.61 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வானிலை, பாசனம், சந்தை விலை நிலவரம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் செல்போனில் அறிந்து கொள்ளும் வகையில் ஏஐ உழவர் செயலி செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகளை வழங்க ஏஐ அடிப்படையிலான செயலுக்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் வினோத் அறிவித்தார். 

இதையும் படிங்க: 100% பயிர் காப்பீடு... மண் முதல் மகசூல் வரை..! வேளாண் பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்புகள்..!!

மக்காச்சோள உற்பத்திக்கு 36 கோடி ரூபாய் நிதி ஒலிக்கடை செய்யப்பட்டுள்ளது. சிறுதானியங்களின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு 63.81 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பருத்தி உற்பத்தியை பெருக்கிட 27.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத்தினை, பாப்பரை, குலசாமை பயிர்களின் செயல்விளக்க திடல்களுக்காக 30 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share