×
 

வாகனங்களை நிறுத்தாமல் சுங்கக்கட்டணம்! 2027 மார்ச் முதல் ஏஐ தொழில்நுட்பம் அமல் என நிதின் கட்கரி தகவல்!

2027 மார்ச் முதல் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல் செயற்கைக்கோள் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தத் தேவையின்றி தானியங்கி முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நவீன நடைமுறை வரும் 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். செயற்கைக்கோள் வழிசெலுத்தல் (GNSS), செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஃபாஸ்டேக் (FASTag) ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்ட அதிநவீனத் தொழில்நுட்பம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் 70 சதவீதம் நடப்பாண்டு இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சுங்கச்சாவடி முறையினால் ஏற்படும் இழப்புகள் குறித்து விரிவான தரவுகளைப் பகிர்ந்த அமைச்சர் நிதின் கட்கரி, சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்திருப்பதால் ஆண்டுதோறும் சுமார் 71 கோடி மனித மணிநேரங்கள் வீணடிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். அதேபோல், வாகனங்கள் நீண்ட நேரம் நிற்பதால் ஆண்டுக்கு 56 கோடி லிட்டர் எரிபொருள் தேவையின்றி வீணாகிறது என்றும், இதனால் ஏற்படும் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இப்புதிய முறை விரைந்து கொண்டுவரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

புதிய நடைமுறையின்படி, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் மற்றும் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் சாதனங்கள் மூலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் பயணித்த சரியான தூரம் துல்லியமாகக் கணக்கிடப்படும். சுங்கச்சாவடிக் கதவுகள் (Toll Plazas) மற்றும் தடுப்புகள் இன்றி, ஏஐ கேமராக்கள் மற்றும் வாகனக் கண்காணிப்புத் தளங்கள் மூலம் இயங்கும் கணக்கில் இருந்து நேரடியாகக் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இதனால் வாகனங்கள் எவ்விதத் தடையுமின்றி சீரான வேகத்தில் பயணிக்க முடியும் என்பதுடன், எரிபொருள் மிச்சப்படுத்தப்பட்டு நெடுஞ்சாலைப் பயண நேரம் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share