×
 

விமான விபத்து...நாங்க தான் காரணமா? கொதித்துப்போன விமானிகள் யூனியன்

ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக வெளியான அறிக்கைக்கு விமானிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 வினாடிகளில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இந்தியாவில் கடந்த மூன்று தசாப்தங்களில் நிகழ்ந்த மிக மோசமான விமான விபத்தாக பதிவாகியது. இந்த விமானம் ஒரு போயிங் 787-8 ட்ரீம்லைனர். இது 2011ஆம் ஆண்டு முதல் வணிகப் பயன்பாட்டில் உள்ளது. இந்த விபத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் 241 பேர் உயிரிழந்தனர், மேலும் தரையில் இருந்தவர்களில் 33 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார். முதற்கட்ட அறிக்கையில், விமானத்துக்கு எரிபொருளை வழங்குவதற்கான சுவிட்சுகள், ரன் என்பதில் இல்லாமல் கட்-ஆப் என்ற நிலையில் இருந்ததாகவும், இதனால், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நிறுத்தப்பட்டு, இரு என்ஜின்களும் செயலற்றுப் போயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக வெளியான அறிக்கைக்கு விமானிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விமானிகளின் தவறால்தான் விபத்து நிகழ்ந்தது போன்று அறிக்கை வெளியிடபட்டதற்கு விமானிகள் சங்கம் கட்டணம் தெரிவித்துள்ளது. ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது என விமானி கேட்டதற்கு நான் துண்டிக்கவில்லை மற்றொரு விமானி பதிலளித்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விமானிகளின் கடைசி உரையாடலில் பதிவு மூலம் எரிபொருள் துண்டிக்கப்பட்டது தெரிய வந்ததாக அறிகையில் கூறி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எரிபொருள் துண்டிப்பு குறித்த காக்பிட் உரையாடல்களை கொண்டு விமானிகள் மீது குற்றம் சுமத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. விமான விபத்து தொடர்பான விசாரணை நடத்திய குழுவில் விமானம் குறித்த புரிதல் உள்ள நபர்கள் இல்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: விமான பயணிகள் கவனத்திற்கு.. விமான அட்டவணையை மாற்றிய ஏர் இந்தியா.. ஜூலை 15 வரை மாற்றங்கள்!

இதையும் படிங்க: ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share