×
 

என்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறு! ஏர் இந்தியா விமான பயணிகள் திக்! திக்!! டெல்லியில் தரையிறங்கிய விமானம்!

இன்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று, இன்ஜினில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இச்சம்பவம் இன்று (டிசம்பர் 22, 2025) காலை நடைபெற்றது.

காலை 6.10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (ஏஐ-665) வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் இரு இன்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்தது. இதை உடனடியாக கண்டறிந்த விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு அவசர தரையிறக்க அனுமதி கேட்டார். உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு, விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். விமானியின் திறமையான நடவடிக்கை காரணமாக யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அவசர தரையிறக்கத்தின்போது விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள், அவசர ஊர்திகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: நாளை மறுநாள் விண்ணில் பாயும் அமெரிக்க செயற்கைகோள்! திருப்பதியில் இஸ்ரோ தலைவர் வழிபாடு!

பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. மாற்று விமானம் ஏற்பாடு செய்யும் வரை பயணிகளுக்கு உணவு, பானங்கள், தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்ற அவசர தரையிறக்கங்கள் அரிதாக நடப்பினும், விமானிகளின் பயிற்சி மற்றும் உடனடி நடவடிக்கை காரணமாக பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஏர் இண்டியா நிறுவனம் பயணிகளின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளது.

இச்சம்பவம் விமானப் பயணிகளிடையே சிறு அச்சத்தை ஏற்படுத்திய போதிலும், அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்ற செய்தி நிம்மதியை அளித்துள்ளது.

இதையும் படிங்க: வேலைவாய்ப்பு, சமூக நீதி..! எல்லோருக்குமான தேர்தல் அறிக்கை வரும்... கனிமொழி MP உறுதி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share