×
 

காற்று மாசினால் கேன்சர்... முடிஞ்சுது சோலி... வெளியான அதி முக்கிய தகவல்...!

காற்று மாசினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக AIIMS முன்னாள் இயக்குநர் ரந்தீப் தெரிவித்து உள்ளார்.

இந்தியா, உலகின் மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தாலும், காற்று மாசு என்ற கொடிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளின்படி, உலகின் மிகவும் மாசடைந்த 50 நகரங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் உள்ளன. டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற மாநகரங்கள் மட்டுமல்ல, சிறு நகரங்களும் கூட வாயுக்களால் நிரம்பிய காற்றை சுவாசிக்கின்றன.

இந்த மாசு இயற்கைச் சூழலையும் மனித உயிர்களையும் பாதிக்கும் ஒரு அமைதியான கொலைகாரனாக மாறியுள்ளது. காற்று மாசின் மூலங்கள் பல்வேறு வகையானவை. நகர்ப்புறங்களில் வாகனங்களின் எண்ணிக்கை விஞ்சி நிற்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான புதிய வாகனங்கள் சாலைகளில் இணைகின்றன. பெரும்பாலானவை டீசல் இயந்திரங்களால் இயக்கப்படுவதால், அவை கருப்பு புகையை வெளியேற்றுகின்றன.

தொழிற்சாலைகள், குறிப்பாக சிமெண்ட், எஃகு, அனல் மின்நிலையங்கள் போன்றவை தொடர்ந்து புகையை வானில் ஏற்றுகின்றன. குளிர்காலத்தில் இந்தியாவின் வடக்கு பகுதிகளில் காற்று மாசு உச்சத்தை எட்டுகிறது. காற்று மாசினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக AIIMS முன்னாள் இயக்குநர் ரந்தீப் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர்..! அதிமுகவின் கூட்டணி அழைப்பை நிராகரித்தது தவெக… தலையில் இறங்கிய இடி…!

காற்று மாசு என்பது அமைதியான கொலையாளி, அது நாடு முழுவதும் மக்களை மெதுவாகக்கொல்லும் என்றும் எச்சரித்து உள்ளார். காற்று மாசு சுவாச நோய்களுடன் நின்று விடுவதில்லை என்றும் பார்கின்சன், டிமென்சியா, புற்று நோய்களுக்கும் காரணமாகிறது எனவும் ரந்தீப் தெரிவித்து உள்ளார். காற்று மாசால் ஏற்படும் சுவாச கோளாறுக்கும் புற்று நோய்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதை ஆய்வு உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் தாமதத்திற்கு இதுதான் காரணம்! தவெக நிர்வாகிகள் ஓடிவிட்டார்களா? நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share