பரபரப்பு... ஏர்போர்ட் மூர்த்திக்கு ஒரு நாள் போலீஸ் காவல்! எழும்பூர் நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சி
ஏர்போர்ட் மூர்த்தியை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆபாசமாக விமர்சித்ததாக கூறி ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையில் டிஜிபி அலுவலகம் முன்பாக விசிக தொண்டர்களால் ஏர்போர்ட் மூர்த்தி தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன் குறித்த ஆபாசமாக விமர்சித்ததால் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருமா பற்றி அவதூறாக பேசுவாயா எனக் கூறி நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான புரட்சித் தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியதுடன் செருப்புகளை கழற்றி அவர் மீது வீசினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகின. ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்திய நபர்கள் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் தப்பிச் சென்றனர்.
இதனை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீதும் ஏர்போர்ட் மூர்த்தி தாக்குதல் நடத்தியதாக திலீபன் என்பவர் புகார் கொடுத்திருந்தார். அதன்படி ஏர்போர்ட் மூர்த்தி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து போலீஸ் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இதையும் படிங்க: அதிகாரத் திமிர்... பதவி போதை! ஏர்போர்ட் மூர்த்தி மீதான பொய் வழக்கு பாசிச வெறியாட்டம் என சீமான் ஆவேசம்
இந்த நிலையில் ஏர்போர்ட் மூர்த்தியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நாளை மாலை 4 மணிக்கு காவிரி எடுத்து விசாரிக்கலாம் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏர்போர்ட் மூர்த்திக்கு வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்.. எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு..!!