போர் பதற்றத்தில் மூடப்பட்ட விமான நிலையங்கள்..! முன்கூட்டியே திறக்க அதிரடி உத்தரவு..!
போர் பதற்றம் காரணமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்கும் தாக்குதல்கள் பொதுமக்கள் மத்தில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், அசம்பாவிதங்களை தடுக்க நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்கள் மே 15 வரை பொதுமக்கள் விமான நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.
அதன்படி, ஜம்மு, காஷ்மீரின் ஸ்ரீநகர், பஞ்சாப்பின் அமிர்தசரஸ், தர்மசாலா, லே, சண்டிகர் உள்ளிட்ட விமான நிலையங்கள் பொதுப்பயன்பாட்டிற்கு மூடப்பட்டு ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும்போது திருப்பி பதிலடி கொடுக்க இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்கான இந்தியா, எல்லை மாநிலங்களில் உள்ள முக்கியமான விமான நிலையங்களை மூடியது.
இதையும் படிங்க: முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை..! மிக முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதம்..!
இந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி! அடுத்த நகர்வு என்ன? பிரதமர் மோடி அதிமுக்கிய ஆலோசனை!