×
 

அஜித் பவார் மரணம்..! விமானத்தில் நடந்தது என்ன? கருப்பு பெட்டியை மீட்டு தீவிர விசாரணை..!

அஜித் பவார் பயணித்து விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்த அஜித் பவார், நேற்று காலை ஒரு கொடூரமான விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்திய அரசியல் வட்டாரத்தையும், மகாராஷ்டிரா மக்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது.அஜித் பவார் மும்பையிலிருந்து தனது சொந்த தொகுதியான பாரமதிக்கு சென்று கொண்டிருந்தார்.

அங்கு வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தல்களுக்கான பிரசாரத்திற்காக நான்கு முக்கிய கூட்டங்களை நடத்த திட்டமிட்டிருந்தார். விமானத்தில் அஜித் பவாருடன் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி விதீப் ஜாதவ், விமான பணிப்பெண் பிங்கி மாலி, முதன்மை விமானி சுமித் கபூர் மற்றும் இரண்டாம் விமானி ஷம்பவி பதாக் ஆகியோர் பயணித்தனர். மொத்தம் ஐந்து பேரே விமானத்தில் இருந்தனர்.

காலை 8:10 மணியளவில் மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், சுமார் 35 நிமிடங்களுக்குப் பிறகு பாரமதி விமான நிலையத்தை அடைந்தது. தரையிறங்கும் முயற்சியின்போது, முதல் அணுகுமுறை தோல்வியடைந்ததால், விமானிகள் இரண்டாவது முறை தரையிறங்க முயன்றனர். ஆனால், அப்போது விமானம் திடீரென இடது பக்கமாக சாய்ந்து, ரன்வேயின் முனையிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் தரையில் மோதியது. உடனடியாக விமானம் பெரும் தீப்பிழம்பாக மாறியது.

இதையும் படிங்க: கொட்டு ராஜா என்கவுண்டர்...! என்ன நடந்துச்சு?.. ஐ.ஜி. பாலகிருஷ்ணன் விளக்கம்..!

பலத்த வெடிப்புகளுடன் விமானம் முழுவதும் சிதறி, உள்ளிருந்த அனைவரும் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி உயிரிழந்தனர். CCTV காட்சிகளில் விமானம் சாய்வதும், பின்னர் பெரும் தீப்பிழம்பாக மாறுவதும் பதிவாகியது. அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிப்பதற்காக விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்த நிலையில் விபத்துக்கு உள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டிருக்கிறது. ஆய்வுக்குப் பிறகு விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரும் என கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கல்லூரி வளாகத்தில் பாலியல் மருந்துகள்..! சிதறி கிடக்கும் மது பாட்டில்கள்..! போலீஸ் தீவிர விசாரணை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share