×
 

'ஆப்ரேஷன் சிந்தூர்': எக்கச்சக்க தீவிரவாதிகள் பலி.. அமைச்சர் கிரண் ரிஜிஜு போட்டுடைத்த உண்மை..!

பாகிஸ்தானில் பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலைத் தொடர்ந்து இன்று 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

இதனிடையே, பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் 100 தீவிரவாதிகள் பலியாக இருப்பதாக கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பாகிஸ்தானை கதறவிட்ட ஆபரேசன் சிந்தூர்.. இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்.. மத்திய அரசு அதிரடி!

இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தீவிரவாதிகளின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என தெரிவித்தார். இதனிடையே முக்கியத்துவம் வாய்ந்த இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி ஏன் பங்கேற்கவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: இன்று மாலை காங். காரிய கமிட்டி கூட்டம்! என்னென்ன விவாதிக்கலாம்... தீவிர ஆலோசனை நடத்த திட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share