பாகிஸ்தானுடன் போர் அபாயம்..! பிரதமருடன் விமானப்படை தளபதி திடீர் ஆலோசனை..!
போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பிரதமர் மோடியை இந்திய விமானப்படை தளபதி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தானுடன் இந்தியாவிற்கு போர் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டால் போர் தொடுக்கப்படும் பாகிஸ்தான் எச்சரித்த நிலையில் இந்தியா சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
ஏவுகணை சோதனை உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியா சார்பின் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ள நிலையில், இந்திய விமானப்படை தளபதி பிரதமரை சந்தித்து உள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானை அலங்கோலப்படுத்துவோம்... மோடியுடன் கைகோர்த்த அங்கோலா..!
பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நினைத்து வரும் நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை இந்திய விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்
இதையும் படிங்க: பாகிஸ்தானை பழி எடுக்க முடியாதா..? குறுக்கு வழியில் சிக்கிய இந்தியா... மோடியின் பொறுமைக்கு சோதனை..!