×
 

ஹர ஹர மகாதேவா! துவங்கியது அமர்நாத் யாத்திரை! பனி லிங்கம் தரிசனம் காண புறப்பட்ட பக்தர்கள்..!

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமர்நாத் யாத்திரைப் பாதையில் ஒவ்வொரு அடிக்கும் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க இந்த ஆண்டு, 3 லட்சத்து 31 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இன்று ஜூலை 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசிக்கலாம். 
இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜம்மு - காஷ்மீர் வந்தடைந்த பக்தர்கள், நுன்வான் மற்றும் பல்டால் ஆகிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன.

இந்நிலையில், முதல் கட்டமாக இரண்டு முகாம்களில் இருந்தும் 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று அமர்நாத் நோக்கி செல்ல துவங்கினர். ஜம்முவில் கவர்னர் மனோஜ் சின்ஹா அமர்நாத் யாத்திரையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதையும் படிங்க: காஷ்மீரில் பதுங்கி இருந்த பாக்., பயங்கரவாதி!! வெறியோடு விரட்டி வேட்டையாடிய இந்திய ராணுவம்..

நுன்வான் - பஹல்காம் வழியாக வழக்கமான பாதையில் 48 கிமீ கடந்து சென்று அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்கலாம். அதே சமயம் கரடுமுரடான மலைப்பாதையில் 18 கிமீ பயணித்தும் பனிலிங்க கோயிலை அடையலாம். இந்த இரு மார்க்கங்களிலும் இன்று புனித யாத்திரை துவங்கியது. 

ஆண்டுக்கு ஒருமுறை 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலையில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆர்வத்துடன் தங்கள் பயணத்தை துவங்கினர்.  கந்தேர்பாவில் அமர்நாத் யாத்ரிகளை, ஜம்மு - காஷ்மீர் மாநில வக்பு வாரிய தலைவர் சையது தரக்ஷண் அண்ட்ராபி வரவேற்றார். அங்கு அமைக்கப்பட்டுள்ள இலவச உணவு வழங்கும் மையத்தை பார்வையிட்ட அவர், அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ள ஹிந்துக்களுக்கு வாழ்த்து கூறினார். 

இந்த புனித அமர்நாத் பனிலிங்க குகை ஜம்மு காஷ்மீரில் கடல் மட்டத்திலிருந்து 12,756 அடி உயரத்தில் உள்ளது. புனித குகையை அடைய 2 பாதைகள் உள்ளன. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்பர். இந்த அமர்நாத் யாத்திரையில் பங்கேற்க நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்துள்ளனர்.

பால்டால் மற்றும் பஹல்காமில் இருந்து பக்தர்கள் குழு ஒன்று புனித குகைக்குப் புறப்பட்டு சென்றனர். முதல் அணியில் சுமார் 4,500 பக்தர்கள் ஜம்முவிலிருந்து புறப்பட்டனர். ஹர, ஹர மஹாதேவா கோஷத்துடன் யாத்திரை துவங்கியது. இன்று 5,200-க்கும் மேற்பட்ட பக்தர்களின் இரண்டாம் குழு ஜம்முவிலிருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

பாதுகாப்பு போலீஸார் மற்றும் மத்திய துணை ராணுவப் படைகளின் பாதுகாப்பில் 168 வாகனங்கள் கொண்ட குதிரைப்படையில் பக்தர்கள் பகவதி நகர் அடிப்படை முகாமிலிருந்து புறப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுவரை ஜம்மு அடிப்படை முகாமிலிருந்து சன்னதிக்குச் சென்ற பக்தர்களின் எண்ணிக்கை 11,138ஐ எட்டியுள்ளது. இரண்டாவது குழுவில் 4,074 ஆண்கள், 786 பெண்கள் மற்றும் 19 குழந்தைகள் அடங்குவர். ஏப்ரல் 22 அன்று பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட போதிலும், நாங்கள் பயந்து ஓடவில்லை என்று சன்னதிக்குச் செல்லும் பக்தர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share