இந்திய பொருட்களின் இறக்குமதி நிறுத்தம்! அமேசான், வால்மார்ட் முடிவால் அச்சத்தில் ஏற்றுமதியாளர்கள்..
மறு அறிவிப்பு வரும் வரை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்தி வைக்குமாறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் வால்மார்ட், அமேசான் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிச்சு ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டிருக்கார். இதனால இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுற பொருட்களோட விலை கடுமையா உயரப் போகுது. இந்த அதிர்ச்சியில இருந்து மீளுறதுக்குள்ள, அமெரிக்காவோட பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களான வால்மார்ட், அமேசான், டார்கெட், கேப் மாதிரியானவை இந்தியாவுல ஆர்டர் செஞ்ச பொருட்களை தற்காலிகமா நிறுத்தி வச்சிருக்காங்க.
“மறு அறிவிப்பு வரும் வரை துணி உள்ளிட்ட எந்த பொருளையும் அனுப்ப வேண்டாம்”னு இமெயில் மூலமா இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அறிவுறுத்தியிருக்காங்க. இதோட, இந்த கூடுதல் வரிச்சுமையை ஏற்றுமதியாளர்களே ஏத்துக்கணும்னு கறாரா சொல்லியிருக்காங்க.
இந்த புது வரி விதிப்பால, இந்திய நிறுவனங்களுக்கு 30 முதல் 35 சதவீதம் வரை கூடுதல் செலவு ஏற்படப் போகுது. இதனால, அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யுறது பெரும்பாலான நிறுவனங்களுக்கு லாபமில்லாம போயிடும். இதனால அமெரிக்காவுக்கு வர்ற ஆர்டர்கள் 40 முதல் 50 சதவீதம் வரை குறைய வாய்ப்பு இருக்கு.
இதையும் படிங்க: ட்ரம்புக்கு எதிராக வலுக்கும் கூட்டணி!! இந்தியா வருகிறார் புதின்.. அஜித் தோவல் அதிரடி அப்டேட்..
இந்தியாவோட துணி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கு அமெரிக்கா ஒரு முக்கியமான சந்தை. 2025 மார்ச்சுல முடிஞ்ச நிதியாண்டுல, இந்தியாவோட மொத்த துணி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 28 சதவீதம், அதாவது 36.61 பில்லியன் டாலர் மதிப்புல அமெரிக்காவுக்கு போயிருக்கு. வெல்ஸ்பன் லிவிங், கோகல்டாஸ் எக்ஸ்போர்ட்ஸ், இண்டோ கவுண்ட், டிரைடென்ட் மாதிரியான பெரிய நிறுவனங்கள் தங்களோட 40 முதல் 70 சதவீத தயாரிப்புகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வந்திருக்காங்க.
இந்த வரி உயர்வு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய தலைவலியை கொடுத்திருக்கு. “இப்படி கூடுதல் வரி போட்டா, எங்களால விலையை போட்டியா வைக்க முடியாது. ஆர்டர்கள் குறைஞ்சா, வேலை இழப்பு, உற்பத்தி குறைப்பு மாதிரியான பிரச்சனைகள் வரும்”னு ஏற்றுமதியாளர்கள் கவலைப்படுறாங்க. குறிப்பா, துணி மற்றும் ஆடைத் துறையில இந்தியாவோட பெரிய சந்தை அமெரிக்கா தான். இந்த திடீர் முடிவு இந்த துறையை கடுமையா பாதிக்கப் போகுது.
இந்திய அரசு இதுக்கு எதிரா என்ன செய்யப் போகுது? மத்திய அரசு ஏற்கனவே அமெரிக்காவோட இந்த அடாவடி வரி விதிப்பை கடுமையா சாடியிருக்கு. “எங்களோட வர்த்தக முடிவுகள் 140 கோடி மக்களோட தேவையை பொறுத்து இருக்கு. மூணாவது நாடு தலையிடுறதை ஏத்துக்க மாட்டோம்”னு மோடி அரசு தெளிவா சொல்லியிருக்கு.
இப்போ இந்த புது பிரச்சனையால, இந்தியா மாற்று சந்தைகளை தேடவும், உள்நாட்டு உற்பத்தியை பலப்படுத்தவும் திட்டமிடுது. ஆனா, அமேசான், வால்மார்ட் மாதிரியான நிறுவனங்கள் ஆர்டர்களை நிறுத்தி வச்சிருக்குறது, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு.
இதையும் படிங்க: ட்ரம்பை சமாளிக்க முடியாமல் திணறுகிறார் மோடி! வெளியுறவு கொள்கையில் பேரழிவு! கார்கே காட்டம்!!