×
 

அமெரிக்காவில் ரூ.95 ஆயிரம்! இந்தியாவில் ரூ.950 மட்டுமே! இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் அதிர்ந்த இணையம்!

அமெரிக்காவில் ரூ.95 ஆயிரத்திற்கு விற்கப்படும் மருந்தை, இந்தியாவில் ரூ.950க்கு மட்டுமே வாங்கியதாக அமெரிக்க பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் ரூ.95 ஆயிரம் மதிப்பில் விற்கப்படும் ஒரு மருந்தை இந்தியாவில் வெறும் ரூ.950க்கு வாங்கியதாக அமெரிக்க இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தொடர்ந்து அமெரிக்க சுகாதார அமைப்பு மற்றும் மருந்து விலைகள் குறித்து இணையத்தில் தீவிர விவாதம் எழுந்துள்ளது.

விக்டோரியா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துக்கான செலவை தனது மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் ஏற்க மறுத்ததாக கூறியுள்ளார். இதனால், அந்த மருந்தை சொந்த செலவில் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த மருந்தின் விலை அமெரிக்காவில் சுமார் ரூ.95 ஆயிரம் எனக் கூறப்பட்டதால் அதிர்ச்சியடைந்த விக்டோரியா, இதுகுறித்து தனது மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது, கனடாவில் செயல்படும் ஒரு மருந்தகத்திற்கு மருத்துவர் பரிந்துரை சீட்டை அனுப்புமாறு மருத்துவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அந்த மருந்தகம் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்தை பெற்றுத் தர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜால்முரி பிரியர் பிரதமர் மோடி! மீண்டும் மசாலா பொரியை ருசித்த ருசிகரம்! வைரல் வீடியோ!

இதையடுத்து, தேவையான ஆவணங்களை அனுப்பிய விக்டோரியா, மருந்தை பெற குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும் என எதிர்பார்த்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், மருந்தகத்திலிருந்து வந்த தகவல் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கூரியர் கட்டணம் உட்பட மொத்த செலவு ரூ.2,400 மட்டுமே என கூறப்பட்டதாம்.

இதில், சர்வதேச கூரியர் செலவாக ரூ.1,450 இருந்த நிலையில், மருந்தின் உண்மையான விலை வெறும் ரூ.950 மட்டுமே இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் இதே மருந்துக்கு ரூ.95 ஆயிரம் வசூலிக்கப்படும் நிலையில், இந்தியாவில் அதே மருந்தை மிகக் குறைந்த விலையில் பெற முடிந்தது எப்படி என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

விக்டோரியாவின் இந்த வீடியோ தற்போது லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது. மேலும், அமெரிக்க மருந்து விலை நிர்ணயம், காப்பீட்டு நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் உலக நாடுகளுக்கிடையேயான சுகாதாரச் செலவுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மெலோனிக்கு மெலோடி பரிசளித்த மோடி! மெலோனி + மோடி = மெலோடி! கலகலப்பு வீடியோ!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share