×
 

நேற்று மோடி! இன்று அமித் ஷா! வந்தே மாதரம் 150 விவாதம்! காங்கிரசை வச்சு செய்யும் பாஜக!

மேற்கு வங்க தேர்தலுடன் தொடர்படுத்தி வந்தே மாதரம் பாடலின் மகிமையை சிலர் குறைத்து மதிப்பிட விரும்புகின்றனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

புதுடெல்லி: “வந்தே மாதரம்” தேசியப் பாடல் 150-வது ஆண்டு விழாவையொட்டி பார்லிமெண்ட்டில் நடக்கும் விவாதத்தை, மேற்கு வங்கத் தேர்தலோடு தொடர்புபடுத்தி அதன் மகிமையைக் குறைக்கப் பார்க்கிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ராஜ்யசபாவில் அதிரடியாகப் பேசினார்.

நேற்று லோக்சபாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த விவாதத்தைத் தொடர்ந்து, இன்று ராஜ்யசபாவில் அமித் ஷா தொடக்க உரையாற்றினார். “லோக்சபாவில் சில எம்பிக்கள் வந்தே மாதரத்தின் அவசியம் குறித்தே கேள்வி எழுப்பினார்கள். இது மிகவும் வருத்தமளிக்கிறது. 2047-ல் உருவாக்க வேண்டிய பிரகாசமான இந்தியாவுக்கு வந்தே மாதரம் மீதான அர்ப்பணிப்பு மிக முக்கியம்” என்று தொடங்கினார்.

“மேற்கு வங்கத் தேர்தல்களுக்காக இந்த விவாதம் நடத்தப்படுவதாக சிலர் கூறுகிறார்கள். அங்கு நடக்கும் தேர்தலோடு தொடர்புபடுத்தி, தேசியப் பாடலின் மகிமையைக் குறைக்க விரும்புகிறார்கள். ஆம், பங்கிம் சந்திர சட்டர்ஜி வங்காளியர் தான், ஆனந்தமடமும் வங்கத்திலிருந்து வந்தது தான். 

இதையும் படிங்க: நேருவை மட்டும் ஏன் டார்கெட் பண்ணுறீங்க?! மோடி, அமித் ஷாவுக்கு கார்கே கறார் கேள்வி!!

ஆனால் வந்தே மாதரத்தை ஒரு மாநிலத்தோடு மட்டும் சுருக்கி வைக்க முடியுமா? எல்லையில் உயிரைத் தியாகம் செய்யும் ராணுவ வீரனும், உள்நாட்டில் கடமையாற்றும் போலீஸ்காரனும் கடைசியாக எழுப்பும் ஒரே முழக்கம் வந்தே மாதரம் தான்!” என்று உருக்கமாகவும் உறுதியாகவும் பேசினார்.

பிரதமர் மோடி நேற்று லோக்சபாவில், “வந்தே மாதரம் என்பது ஒரு பாடல் மட்டுமல்ல, சுதந்திர போராட்டத்தின் உயிர்நாடி” என்று கூறியதைத் தொடர்ந்து, அமித் ஷா இன்று “இது ஒரு மாநிலத்தின் சொத்து அல்ல, முழு இந்தியாவின் உணர்வு” என்று அழுத்தமாகப் பதிவு செய்தார்.

இரு அவைகளிலும் நடக்கும் இந்த விவாதம், எதிர்கால சந்ததியினருக்கு வந்தே மாதரத்தின் உண்மையான மகத்துவத்தைப் புரிய வைக்கும் என்று அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் “மேற்கு வங்கத் தேர்தலை ஒட்டியே வந்தே மாதரம் பாடல் கொண்டாடப்படுகிறது” என்று சொல்லி விவாதத்தை அரசியலாக்க முயல்வோருக்கு அமித் ஷா கொடுத்த இந்த பதிலடி, சமூக வலைதளங்களில் வைரலாகி, “வந்தே மாதரம்” மீதான உணர்வலையை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது.

இதையும் படிங்க: வந்தே மாதரம் விவாதம்!! நேரு, காங்கிரசை பொளந்து கட்டிய மோடி! ராகுல்காந்தி நச் பதில்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share