×
 

புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி! அமித்ஷா வழங்கும் வரலாற்று சிறப்பு நிகழ்ச்சி

அமித்ஷா வருகையையொட்டி புதுச்சேரியில் நேற்று முதலே பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் புதுச்சேரி போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கப்படும் ‘ஜனாதிபதியின் வண்ணக்கொடி’ விருது நிகழ்ச்சி இன்று கோரிமேடு போலீஸ் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடியை வழங்குகிறார். இதையொட்டி நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி காவல்துறையின் சிறப்பான பணியை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் காவல்துறையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேற்று இரவு புதுச்சேரி வந்த அமித்ஷாவை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கவர்னர் மாளிகையில் வரவேற்றனர். அங்கு இரவு தங்கிய அவர், இன்று காலை கவர்னர் மாளிகையில் இருந்து கோரிமேடு போலீஸ் மைதானத்திற்கு புறப்பட்டார்.

இதையும் படிங்க: பரபரக்கும் தி. மலை..!! அண்ணாமலையாரை தரிசிக்க செல்லும் அமித்ஷா..! 3 அடுக்கு பாதுகாப்பு..!

காலை 8.15 மணி முதல் நடைபெறும் விழாவில் அமித்ஷா பங்கேற்று, புதுச்சேரி காவல்துறைக்கு ‘ஜனாதிபதியின் வண்ணக்கொடி’ விருதை வழங்கி உரையாற்றுகிறார். விழாவை முன்னிட்டு கோரிமேடு போலீஸ் மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அமித்ஷா வருகையையொட்டி புதுச்சேரியில் நேற்று முதலே பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் புதுச்சேரி போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சாலைகளில் வாகன சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், அமித்ஷா செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சில இடங்களில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு காரணமாக டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி சாதனங்களை பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து அமித்ஷா கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி’ என்ற ஊர்வலத்தையும் தொடங்கி வைத்து, புதுச்சேரி விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னைக்கு புறப்படுகிறார்.

இதையும் படிங்க: மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share