காங்., கூட்டணியே காணாமல் போகும்!! துடைத்தெறியப்படுவீர்கள்!! ராகுல்காந்திக்கு அமித் ஷா எச்சரிக்கை!
பிரதமர் மோடியை அவமதிக்கும் போதெல்லாம் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டுள்ளதாகவும், பீஹார் தேர்தலுக்குப் பிறகு மஹா கூட்டணி காணாமல் போய்விடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தை தர்பங்காவில் தொடங்கினார். அங்கு அவர் கூறியதாவது: "என்டிஏ கூட்டணி ஆட்சியில் பீகாரின் வளர்ச்சி பின்தங்கியுள்ளது. இங்குள்ள இளைஞர்கள் ஏமாற்றப்படுகின்றனர். பீகார் இளைஞர்கள் உழைப்பில் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் கடினமாக உழைத்து, படிக்கின்றனர். ஆனால், பணம் படைத்தவர்களுக்கே எல்லாம் சாத்தியம். பணக்கார மாணவர்களுக்கு தேர்வுக்கு ஒரு நாள் முன்பே கேள்வித்தாள் கிடைத்துவிடுகிறது. இதனால் உழைத்த மாணவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். இங்கு எல்லாம் பணக்காரர்களுக்கே கிடைக்கும்" என்றார்.
தொடர்ந்து, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் முதல்வரானால், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனக்குழுக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகிய அனைவருக்கும் சம நீதி, சம வாய்ப்பு கிடைக்கும் என்று ராகுல் உறுதியளித்தார். பிரதமர் மோடியை "மிகச் சிறந்த நடிகர்" என்று சாடி, "தேர்தல் நேரத்தில் அவரிடம் எதை வேண்டுமானும் எதிர்பார்க்கலாம். 200 பேர் கூடி அவரை நடனம் ஆடச் சொன்னால், மேடையிலேயே பரதநாட்டியம் ஆடுவார். ஓட்டுக்காக டான்ஸ் ஆடத் தயங்கமாட்டார்" என்று கிண்டலடித்தார்.
சட் பூஜை குறித்தும் ராகுல் கடுமையாக விமர்சித்தார். "சட் பூஜை பொழுது யமுனையில் குளிப்பேன் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால், யமுனை நீர் அவ்வளவு மாசுபாட்டால் நிறைந்தது. அதை குடித்தால் உடனே உடல் நலம் குன்றும் அல்லது இறந்து போவார். கால் வைத்தாலே பாதிப்பு. ஆனால், மோடி ஒரு சிறிய குளத்தை ஏற்படுத்தி, பைப் மூலம் சுத்தமான நீர் வரவழைத்து யமுனையில் குளிப்பதாக நாடகம் ஆடினார்" என்று கூறினார்.
இதையும் படிங்க: அடடா..!! கல்யாணம் பற்றி எழுந்த பேச்சு..!! உடனே வெட்கப்பட்டு தலைகுனிந்த ராகுல் காந்தி..!!
இதற்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். லக்கிசராயில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது; நேற்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். அவர் பிரதமரை மட்டுமல்ல, சத்தி மாயாவையும் (சூரிய கடவுள்) இழிவுபடுத்தியுள்ளார். சத்தி மாயாவை வழிபடுபவர்களை நாடகமாடுபவர்கள் என்று ராகுல் கூறுகிறார். சூர்ய கடவுளின் முக்கியத்துவத்தையும், நம்பிக்கையையும் நீங்களும், உங்கள் தாயாரும் புரிந்து கொள்ள மாட்டீர்கள்.
பிரதமர் மோடியை அவமதிக்கும் விதமான வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறீர்கள். கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பாருங்கள். காங்கிரஸ் தலைவர்கள் பலமுறை பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பரப்பினர். அப்போதெல்லாம், காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் மோடியின் தாயாரை அவமதித்தனர். நீங்கள் மோடியை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தினீர்கள். மேலும், நீங்கள் சூரியகடவுளையும் தற்போது அவமதித்துள்ளீர்கள்.
நவம்பர் 14ம் தேதி பெட்டிகள் (ஓட்டு எண்ணிக்கை) திறக்கப்படும் போது, உங்கள் கூட்டணி முழுவதுமாக துடைத்தெறியப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் + தவெக கூட்டணியா? - அதை யாரும் தடுக்க முடியாது... உண்மையை உடைத்துப் பேசிய கே.எஸ்.அழகிரி...!