ஒருத்தரு மிஞ்ச மாட்டாங்க! மொத்தமா காலி பண்ணிருவேன்! அசாமில் ஊடுருவல்காரர்களுக்கு அமித்ஷா வார்னிங்!
அசாமில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார்.
குவஹாத்தி: அசாம் மாநிலத்தில் ஊடுருவல்காரர்களுக்கு எதிரான கடும் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
திப்ரூகர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், "அசாமில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவார். இது என் உறுதிமொழி" என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த பேச்சு அசாம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், எதிர்க்கட்சிகளிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அமித் ஷா தொடர்ந்து பேசுகையில், "அசாம் மக்களிடம் நான் கேட்கிறேன். இங்கு ஊடுருவல்காரர்கள் இருக்க வேண்டுமா? அத்துமீறி நுழைபவர்கள் இருக்க வேண்டுமா? காங்கிரஸ் ஆட்சியில் அசாமை ஊடுருவல்காரர்களின் மையமாக மாற்றினார்கள். வாக்கு வங்கியை உயர்த்துவதற்காகவும், அதிகாரத்தை தக்கவைப்பதற்காகவும் இதை ஆயுதமாக பயன்படுத்தினார்கள். ஆனால் பாஜக ஆட்சியில் இந்த நிலை மாறியுள்ளது" என்று குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: உங்க அக்காவ கொல்லப்போறேன்! ரெக்கார்ட் பண்ணிக்கோ! டெல்லியை அதிரவைத்த பெண் கமாண்டோ படுகொலை!
மேலும், "அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பாஜக அரசு வங்கதேச ஊடுருவல்காரர்களிடமிருந்து 1 லட்சத்து 26 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை விடுவித்துள்ளது. இது அரசின் கடமை. இந்த பணியை தொடர்ந்து செய்வோம். அசாமில் மூன்றாவது முறையாக பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு அசாம் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊடுருவல் பிரச்சினை அசாமில் நீண்டகாலமாக இருந்து வரும் முக்கிய பிரச்சினை. என்ஆர்சி, சிஏஏ போன்றவை இதனுடன் தொடர்புடையவை. பாஜக தரப்பில் இதை தேர்தல் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் இதை மக்களை பிரிக்கும் அரசியல் என்று விமர்சித்து வருகின்றன.
அமித் ஷாவின் இந்த கடும் நிலைப்பாடு 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் பாஜகவின் பிரசாரத்தை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அசாம் மக்கள் இதை எப்படி வரவேற்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஊடுருவல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: கடையேழு வள்ளல்னு நினைப்போ? தரமான உணவுக்கூட கொடுக்க முடியலையா? அண்ணாமலை ஆவேசம்..!