×
 

விஜயிடம் போனில் பேசிய அமித்ஷா! கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவு! திமுகவுக்கு கிலி!

கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து விஜய்க்கு வழங்கப்படும் மத்திய போலீஸ் பாதுகாப்பை இரு மடங்காக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம், தமிழக அரசியலை முடுக்கிவிட்டுள்ளது. இதற்குப் பின், விஜய்க்கு வழங்கப்படும் மத்திய அரசின் போலீஸ் பாதுகாப்பை இரு மடங்காக அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இது, பாஜக-அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க.வை இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. அதேநேரம், தி.மு.க. தரப்பு, இந்த நடவடிக்கையால் அரசியல் திருப்பமடையும் என்ற பதற்றத்தில் உள்ளது.

கடந்த 27-ம் தேதி மாலை, கரூரின் வேலுச்சாமி புரத்தில் நடந்த த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். விஜய் 4 மணி நேரம் தாமதமாக வந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர்( 18 பெண்கள், 13 ஆண்கள், 5 சிறுமிகள், 5 சிறுவர்கள்) உயிரிழந்தனர். 

இதையும் படிங்க: #BIG BREAKING!! கைதாகிறாரா விஜய்? சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்! அல்லு அர்ஜூனுக்கு நடந்தது நினைவிருக்கா?

60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை பெற்றனர். த.வெ.க. தரப்பினர், "காவல்துறை பாதுகாப்பு இல்லாததே காரணம்" என்று குற்றம் சாட்ட, தி.மு.க.வினர் "தவெகவின் நிர்வாக குறைபாடு" என்று பதிலளித்தனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்து, காயமடைந்தவர்களை சந்தித்தார். த.வெ.க. தலைவர் விஜய், "இது என் வாழ்நாள் வலி" என்று கூறி, ரூ.20 லட்சம் உதவி அறிவித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் காயமடைந்தவர்களை சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

கட்சி வட்டாரங்களின்படி, 2026 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க, பாஜக வலுவான கூட்டணி தேவை என்பதே உண்மை. கடந்த ஏப்ரல் 11-ம் தேதி, அமித் ஷா சென்னை வந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை அறிவித்தார். ஆனால், சமீப சர்வேக்கள், இந்த கூட்டணி போதாது என்பதை காட்டியுள்ளன. எனவே, த.வெ.க. தலைவர் விஜயை கூட்டணியில் சேர்க்க முயன்றனர். விஜய், அ.தி.மு.க., பா.ஜ.க.வை தொடர்ந்து விமர்சித்ததால் முயற்சி தோல்வியடைந்தது.

கரூர் சம்பவம், இந்த சூழலை மாற்றியது. த.வெ.க.வினர், "தி.மு.க. சதி" என்று கூற, அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் இதை வழிமொழிகின்றனர். அமித் ஷா, விஜயிடம் தொலைபேசியில் பேசி, "கரூர் சம்பவத்துக்குப் பின் உங்கள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே வழங்கும் மத்திய போலீஸ் பாதுகாப்பை இரு மடங்காக்க திட்டமிட்டுள்ளோம்" என்று ஆறுதல் கூறினார். இது, விஜயை கூட்டணியில் இணைக்கும் அறிகுறியாகக் கருதப்படுகிறது. மத்திய பாதுகாப்பு அதிகரிப்பு, விஜயின் அரசியல் பாதுகாப்பை உறுதி செய்யும் என கூறப்படுகிறது.

தி.மு.க. தரப்பு, இந்த நடவடிக்கையால் பதற்றத்தில் உள்ளது. கரூர் வழக்கு சிபிஐ கையில் எடுக்கப்பட்டால், தி.மு.க.வுக்கு எதிராகவே திருப்பமடையும் என அவர்கள் நம்புகின்றனர். தேர்தல் நெருக்கத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விசாரணைக்கு ஈர்த்து, கட்சியை தடுப்பது பாஜக உத்தி என தலைவர்கள் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர். "இதை சாதுர்யமாக எதிர்கொள்ள வேண்டும்" என்று ஸ்டாலின் கூறியதாக தெரிகிறது.

அமித் ஷாவை சமாதானப்படுத்த, இரு தரப்புக்கும் நெருக்கமானவர்களை வழியாக தி.மு.க. முயல்கிறது. "வேகமாக செல்ல வேண்டாம்" என்று பாஜக தரப்பை அறிவுறுத்தும் முயற்சியில் உள்ளனர். கரூர் விசாரணை, ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நடக்கிறது. த.வெ.க. CBI/SIT விசாரணை கோரியுள்ளது.

இந்த சம்பவம், 2026 தேர்தலில் புதிய கூட்டணி சாத்தியங்களை உருவாக்கியுள்ளது. பாஜக, விஜயை கூட்டணியில் இணைக்க முயல்கிறது. தி.மு.க.வுக்கு இது அச்சுறுத்தல். விஜய், "அரசியல் பயணம் தொடரும்" என்று உறுதியளித்துள்ளார். கரூர் துயரம், தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பஞ்சாயத்து பேசணும் வாங்க!! செங்கோட்டையன் பற்ற வைத்த நெருப்பு! இபிஎஸ்க்கு அமித்ஷா செக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share