×
 

ஊடுருவல்காரர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்! மம்தா எதிர்ப்புக்கு அமித்ஷா தரமான பதிலடி

“நாட்டின் பிரதமரையும், முதல்வர்களையும் தேர்ந்தெடுக்கும் உரிமை வெளிநாட்டில் இருந்து ஊடுருவியவர்களுக்கு இல்லை. எனவே, ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் அடையாளம் கண்டு வெளியேற்றுவோம்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.) குறித்து கடும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். “இந்தியாவின் பிரதமரையும் முதல்வர்களையும் தேர்ந்தெடுக்கும் உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே உண்டு. எந்த ஊடுருவல்காரருக்கும் அந்த உரிமை இல்லை. ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் அடையாளம் கண்டு வெளியேற்றுவோம்” என்று அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

குஜராத்தின் ஹரிபூரில் நடந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) 61வது எழுச்சி நாள் விழாவில் அமித் ஷா பேசினார். அப்போது அவர், “ஊடுருவலைத் தடுப்பது தேசிய பாதுகாப்புக்கு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும் அவசியம்.

தேர்தல் கமிஷன் நடத்தும் வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்புப் பணியை சில அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. இது துரதிர்ஷ்டவசமானது. இந்தப் பணி நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. பொதுமக்கள் இதை முழுமையாக ஆதரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: வேட்பாளர் தேர்வில் களம் இறங்கும் அமித்ஷா!! பாஜக நிர்வாகிகள் கலக்கம்!! 2026ல் யாருக்கு சீட்?!

சமீபத்தில் பீஹாரில் நடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு எஸ்.ஐ.ஆர். பணி மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2026-ல் தேர்தல் நடக்கவுள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரா, அசாம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரியிலும் இப்பணி தீவிரமாக நடக்கிறது.

இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தமிழக அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. “இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் ஆபத்தான நடவடிக்கை” என்று மம்தா கூறியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமித் ஷா, “பீஹார் தேர்தல் முடிவுகள் ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் கட்சிகளுக்கு மக்கள் தந்த எச்சரிக்கை. ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் ஒருபோதும் ஆதரவு தர மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அயராத பணியைப் பாராட்டிய அவர், “எல்லையில் ஊடுருவலைத் தடுப்பதும், உள்ளே இருப்பவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றுவதும் இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் இரு கண்கள்” என்று குறிப்பிட்டார்.

வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்புப் பணி தேர்தல் கமிஷனின் சுயேச்சை நடவடிக்கையாக இருந்தாலும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு இதை தேசிய பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத் தூய்மைப்படுத்தலுடன் இணைத்து வலுவாக ஆதரிக்கிறது. இதனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் புதிய அரசியல் மோதல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: இன்று துவங்குகிறது SIR பணி! தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் தேர்தல் கமிஷன் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share