"சிங்கம் ஒன்று புறப்பட்டதே"... ரஜினி பாடலுடன் அமித்ஷா மாஸ் என்ட்ரி...! தொண்டர்கள் செம்ம குஷி..!
புதுச்சேரியில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ரஜினி பாடல் ஒலிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா மாஸ் என்ட்ரி கொடுத்தார்.
புதுச்சேரியின் காரைக்கால் பகுதியில் இன்று நடைபெற்று வரும் பாஜகவின் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. அமித் ஷா நேற்றிரவு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கிருந்து தங்கியிருந்த ஓட்டலில் பாஜக முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் சென்ற அவர், திருநள்ளார் ஹெலிபேடில் இறங்கி நேரடியாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்றார். காரைக்கால் நகராட்சி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும் ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் கெடுபிடியாக உள்ளது. சுமார் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அமித் ஷா முக்கியமாக தேர்தல் தயாரிப்புகள், பூத் அளவிலான வலிமைப்படுத்தல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி உத்திகள் ஆகியவை குறித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பாஜக செயல்பட்டு வரும் சூழலில், முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுவையில் பாஜக பிரச்சார பயணம் தொடக்கம்... தாமரை மலருக்கு வண்ணம் தீட்டிய அமித்ஷா..!
முன்னதாக கட்சியின் 'பூத் விஜய் அபியான்' என்ற பிரசாரத்தைத் தொடங்கி வைத்து, சுவர் எழுத்து நிகழ்ச்சியிலும் ஈடுபட்டார். புதுச்சேரியில் நடைபெற்று வரும் பிரச்சார பொது கூட்ட நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்கும்போது நடிகர் ரஜினிகாந்தின் சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாடல் ஒலிக்கப்பட்டது. ரஜினி பாடலுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா பொதுக்கூட்ட மேடைக்கு மாஸாக என்ட்ரி கொடுத்தார். அவரைப் பார்த்ததும் அங்கு கூட இருந்த பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
இதையும் படிங்க: காரைக்காலுக்கு புறப்பட்ட அமித் ஷா..! தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை..!