ஜெயிலுக்கே போனாலும் அரசாங்கத்தை நடத்துறாங்க... பதவிப் பறிப்பு மசோதா குறித்து அமித்ஷா கருத்து
பதவிப் பறிப்பு மசோதா குறித்தும், ஜெகதீப் தன்கர் பதவி விலகியது குறித்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
கிரிமினல் வழக்குகளில் சிறைக்குச் செல்லும் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோரை பதவியில் இருந்து நீக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தின் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்மொழிந்தார். தொடக்கம் முதலே எதிர்க்கட்சிகள் இதற்கு கண்டன தெரிவித்தனர். அது மட்டுமல்லாது மசோதாவின் நகலையும் கிழித்து எரிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், பதவிப் பறிப்பு மசோதா குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது இன்றும் கூட, எப்போதாவது சிறைக்குச் சென்றால், சிறையில் இருந்தே அரசாங்கத்தை எளிதாக அமைக்க முயற்சி செய்வதாக கூறினார். அதனால் தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.
ஜெகதீப் தன்கர் அவரது பதவிக் காலத்தில், அவர் அரசியலமைப்பின் படி நல்ல பணிகளைச் செய்தார் என்றும், அவரது தனிப்பட்ட உடல்நலப் பிரச்சினை காரணமாக அவர் ராஜினாமா செய்துள்ளார்., அதிலும் ஏதாவது குறை கண்டுபிடிக்க முயற்சிக்கக்கூடாது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: NDA கூட்டணியின் தலைவர் இபிஎஸ் தான்! அமித்ஷா கருத்துக்கு மாறாக பேசிய நயினார்…
லாலு யாதவை காப்பாற்ற மன்மோகன் சிங் கொண்டு வந்த அவசர சட்டத்தை ராகுல் காந்தி கிழித்ததற்கு என்ன நியாயம் என்றும் அன்று ஒழுக்கம் இருந்திருந்தால், இன்று நீங்கள் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் தோல்வியடைந்ததால் அது இல்லையா எனவும் கேட்டார். ராகுல் காந்தி நடத்திய பல்வேறு மக்கள் தொடர்புத் திட்டங்களின் வீடியோ ரீல்கள் குறித்து பேசிய அவர், ஒரு திட்டத்தை நிர்வகிப்பதற்கும் பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது என்றார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு போட்டியே கிடையாது! தெறிக்க விடுவோம்... அமைச்சர் நேரு உறுதி..!